திருச்செந்தூர் முருகனுக்கே இப்படியா?

செய்தி:

திருச்செந்தூரில் ரகசிய ஆய்வுக்கு வந்த நிலையில், சுவாமி தரிசனத்துக்காக அமைச்சரிடமே ரூபாய் 4000 லஞ்சம்!

– ஜிபே மூலம் பணம் பெற்ற கோயில் அர்ச்சகர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்: 2 பேர் பணி நீக்கம்

கோவிந்த் கமெண்ட்:

திருச்செந்தூர் கோவில் கருவறையில் உள்ள முருகப்பெருமானை தரிசிப்பதற்கே சிறப்புக் கட்டணமாக கூடுதலான தொகை வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இப்போது மட்டுமல்ல நீண்ட காலமாகவே இருந்துவருகிறது.

ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகள் இருந்தும் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது, அறநிலையத்துறைக்கென்று புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டு, அந்தப் புதிய அமைச்சரின் முகம் கோவிலில் உள்ளவர்களுக்குப் பரிச்சயமாகாததால், அவரிடமும் லஞ்சம் பெறப்பட்டிருக்கிறது.

அதையும் அவர் ஆதாரப்பூர்வமாக ஜிபே மூலம் செலுத்தி இருக்கிறார். பிறகு அவர்கள் கையும் ஜிபேயுமாக பிடிப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

தன்னைப் பார்க்க வருகிறவர்களுக்கு இப்படிப்பட்ட இடையூறுகள் வருவது குறித்து எல்லாம்வல்ல முருகப்பெருமான்தான் காத்து அருள வேண்டும்.

திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.

#திருச்செந்தூர் #முருகன் #திருச்செந்தூர்முருகன் #ஜிபே #GPay #லஞ்சம் #அறநிலையத்துறை #அமைச்சர் #கோவில் #திருக்கோவில் #தமிழ்நாடு #அரசியல் #செய்திகள் #விவாதம் #பொதுமக்கள் #நிர்வாகம் #Thiruchendur #Murugan #ThiruchendurMurugan #Bribes #CharitiesDepartment #Minister #TempleAdministration #TamilNadu #Politics #News #CurrentAffairs #PublicIssue #Debate #Governance #TempleNews #TrendingNow

You might also like