தமிழ் சினிமாவுக்கு திருப்புமுனை தந்த ‘நல்ல தம்பி’!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் மாணவனாக இருந்த சமயம். அப்பொழுது அண்ணாவின் சொற்பொழிவுகளை கேட்டேன். திராவிட முன்னேற்றக் கழகம் கூடத் தோன்றியிராத காலம் அது.   பொதுக்கூட்டங்களிலும் மாணவர் கூட்டங்களிலும் அண்ணாவின் பேச்சைக் கேட்க நேர்ந்த போதெல்லாம் இவர் நிச்சயம் ஒரு பெரிய தலைவராக வரப்போகிறார் என்று நான் கருதுவேன்.   அண்ணாவின் அரசியல் எழுச்சியையும் கலையுலக எழுச்சியையும் தள்ளி நின்று ரசித்த பல்லாயிரக்கணக்கான பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.   அடுத்து ‘நல்லதம்பி’ படம் பார்த்தேன். […]

கர்ணன் என்று தான் பெயர் வைத்திருக்க வேண்டும்!

கலைவாணர் என்.எஸ்.கே அவர்களின் திரைப்பட நிறுவனத்தின் கணக்கு வழக்கு பார்க்கும் ஒரு கணக்காளர், வருமான வருவாய் அதிகாரி ஹனுமந்த ராவ் சந்தித்து, அந்த கணக்கு – வழக்குகளைக் கொண்டு வந்து காண்பித்தார். அதைப் பார்த்த அதிகாரி ஹனுமந்த ராவ், “என்னயா நிறைய தர்மம், தர்மம்-னு கணக்கு எழுதிருக்கு. எப்படி நம்புறது?” என்று கேட்டுள்ளார். என்னெனவோ சொல்லியும் அவர் நம்பாததால், இப்படி சொல்லியுள்ளார். “சார் நீங்க வேணா இப்ப நேரா போய் என்.எஸ்.கே-வை பாருங்க. உங்களை யாருன்னு சொல்லிக்காம, […]

இந்தியப் பெண்களின் விடுதலைப் போராடிய ஐரோப்பியர்!

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர் அன்னி பெசன்ட். எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்டக்காரர், பிரம்மஞான சபையை இந்தியாவில் நிறுவியவர் என்று பல்வேறு பரிமாணங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியவர். முற்போக்கு எண்ணங்களைக் கொண்டிருந்த அன்னி பெசன்ட், மகள் நோய்வாய்ப்பட்டபோது நாத்திகராக மாறினார். மதத்தின் மீது தீவிரப் பற்றுகொண்ட கணவருடன் அவரால் சேர்ந்து வாழ இயலவில்லை. படித்தார்; பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்துப் பரப்புரை செய்தபோது, எதிர்ப்புகளைச் சம்பாதித்தார். ‘லிங்க்’ பத்திரிகையில் அயர்லாந்திலும் […]

தாயும் மகளும் தனித்துவமிக்கவர்கள்!

‘இசையின் அரசி’ என்றும், ‘பாட்டுக்கொரு சுப்புலட்சுமி’ என்றும் போற்றப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மதுரையில் ஒரு இசைப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் சண்முகவடிவு வீணை வாசிப்பதில் வல்லவர். தாயாரின் வழிகாட்டுதலில் சிறுவயதிலேயே இசைப் பயிற்சியைத் தொடங்கிய சுப்புலட்சுமி, மிகக் குறுகிய காலத்திலேயே கர்நாடக இசையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். தனது 13-வது வயதிலேயே சென்னை சங்கீத வித்வத் சபையில் பாடி, அப்போதைய இசை மேதைகளின் பாராட்டுகளைப் பெற்றார். கர்நாடக இசையை […]

கப்பலோட்டிய தமிழனின் திருமண அழைப்பிதழ்!

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பிறந்த தினம் இன்று. பிறப்பு: செப்டம்பர் 5, 1872 பிறந்த இடம்: ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டம். இறப்பு: நவம்பர் 18, 1936. வ.உ.சி-யின் திருமண அழைப்பிதழ். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பியின் முகநூல் பதிவிலிருந்து…

இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்!

பேரா. சி. இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள் கட்டுரையின் தொடர்ச்சி: ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள் : அமைச்சர்‌ யார் (1949)‌, எல்லோரும்‌ இந்நாட்டரசர்‌, திருக்குறள்‌-எளிய பொழிப்புரை (1963) வள்ளுவர்‌ வகுத்த அரசியல்‌ (1968), வள்ளுவர்‌ கண்ட இல்லறம் (1971)  எனத் திருக்குறளுக்குச் சிறப்பான உரையும் விளக்கங்களும் எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம். 1. எளிமை, 2. நுண்மை, 3. பகுத்தறிவுப் பார்வை, 4. தமிழ் நெறிப் பின்புலம், 5. பெண்ணுரிமை பேணல், 6. உரையாளர் […]