தவெகவினருக்கு ஏன் இந்த ஆர்வக் கோளாறு?

செய்தி : முதல்வர் விஜய்யை, பிரதமர் நாற்காலியில் ராகுல்காந்தியே அமர வைப்பார்! தவெக எம்எல்ஏ கனிமொழி கருத்து; காங்கிரஸ் எதிர்ப்பு. கோவிந்த் கமெண்ட்: தவெகவினர் ஆர்வக்கோளாறு மட்டுமல்ல அவசரக் கோளாறாகவும் இருக்கிறார்கள். தற்போது முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கிற விஜய்யை பிரதமர் பதவியில் உட்கார ஆசைப்படுகிறார்கள் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தற்போது விஜய் உட்கார்ந்திருக்கும் நாற்காலியில் தொடர்ந்து சிக்கலின்றி உட்கார தவெகவினரே விரும்புகிறார்களா? என்பதுதான் கேள்வி.

ஓபிஎஸ்க்கு என்ன ‘தோஷம்’ பிடித்திருக்கிறது?

செய்தி : தமிழக சட்டமன்றத்தில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது, ”பாம்புகள் அதிகமாக இருக்கிறது. அதற்கான மருத்துவ வசதி வேண்டும்” என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் கேட்டார். அப்போது, முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், “பல்வேறு தொகுதிகளில் பாம்பு கடி இருப்பதாக அறிய முடிகிறது. ஆக, அந்தத் தொகுதியெல்லாம் தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். அதனால் நாகதோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனைகள் இருந்தால், அதை நடத்திக் காட்ட வேண்டும்.” என்றார். கோவிந்த் கமெண்ட்: இதே […]

பெண்கள் தனித்து வாழ்வது சவாலாக இருக்கிறது!

கார்ல் மார்க்ஸ் சிலை அமைப்பு, பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றது, தனித்து குழந்தைகளை வளர்க்கும் பெண்களின் பிரச்சினை, தலித் பெண்கள் மாநாடு, போரில்லா உலகம், 33% இட ஒதுக்கீட்டை நிர்பந்தித்து முதலமைச்சர் விஜய்யை சந்தித்த பெண்கள் குழு.. என பரபரப்பாக இயங்கும் மனிதி செல்வியிடம் பீட்டர் துரைராஜின் நேர்காணல்; பொது வாழ்க்கைக்காக ஆசிரியர் பணியை துறந்த மனிதி செல்வி, இந்த நேர்காணலில் பெண்கள் எதிர் கொள்ளும் பலவிதமான பிரச்சினைகளை அலசுகிறார். தனித்து வாழும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் […]

மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்!

கண்ணதாசன் 100 – 3 “காதலாகி கசிந்துருகி“ என்று பழந்தமிழ் இலக்கியம் சார்ந்து ஒரு சொல்லாடலை நீங்கள் வாசித்திருக்கலாம். அப்படி காதல் கசிந்து உருகும்படி மிகவும் நேர்த்தியான பிரியத்தை எளிய சொற்கள் மூலம் பல பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அப்படிப்பட்ட காதலுக்கு உதாரணமாக அவருடைய பல திரைப்பட பாடல்களைச் சொல்லலாம் என்றாலும் இங்கு நான் குறிப்பிட விரும்புவது நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், ஜமுனாவும் சேர்ந்து நடித்த நிச்சய தாம்பூலம் படத்தில் இடம்பெற்ற இந்தப் […]

ஸ்ரீப்ரியாவிடம் இப்படியொரு வசனத்தைப் பேசிய ரஜினி!

ரசனைக்குரிய காட்சி : ருத்ரய்யாவின் இயக்கத்தில் 70-களில் வெளியான படம் ‘அவள் அப்படித்தான்’. ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா, சரிதா என்று பலர் நடித்திருந்தாலும் ஸ்ரீப்ரியாவின் கதாப்பாத்திரம்தான், இந்தப் படத்தை நகர்த்துகிற மையக் கதாபாத்திரம். படத்தில் ஸ்ரீப்ரியா படு கேஷுவலாக பேசும் வசனங்கள் அவ்வளவு ஷார்ப்பாக இருக்கும். “மத்தவங்கக்கிட்ட இருந்து தன்னை வித்தியாசமா காட்டுகிறதுதான் இப்ப ஒரு பேஷனா இருக்குல” என்று ஒரு காட்சியில் பளிச்சென்று சொல்லுவார் ஸ்ரீப்ரியா. இன்னொரு காட்சியில் ரஜினி ஸ்ரீப்ரியாவை தொட்டதும் சட்டென்று ரஜினியின்  […]

பேரா. சி. இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்!

தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன.