சென்னைக்கு அருகில் கொய்யா பண்ணை: ஜெயித்துக்காட்டிய விவசாயி!

சக்சஸ் ஸ்டோரி: 5 திருவள்ளூருக்கு அருகிலுள்ள தண்ணீர்க்குளம் கிராமத்தில் பத்து ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்கிறார் குமார். அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மேலமடை. மதுரையில் பிஎஸ்சி படித்தார். பிறகு ஏஸி மெக்கானிக் டிப்ளமோ முடித்துவிட்டு, மலேசியாவில் ஆறு ஆண்டுகள் வேலைபார்த்தார். சென்னைக்குத் திரும்பிய குமார், எலக்ட்ரிக்கல் ஒப்பந்தப் பணிகளில் ஆர்வம் காட்டினார். இயற்கை விவசாயம் பக்கம் திரும்பிய தருணம் பற்றி பேசிய குமார், “தமிழகம் முழுவதும் 240 செல்போன் டவர்களை அமைத்தோம். சென்னை […]

பிரஷர் குக்கரில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

நவீன சமையலறையில் ராணியாக பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்துள்ளது பிரஷர் குக்கர். சமையல் நேரத்தை குறைக்கவும், எரிவாயுவை மிச்சப்படுத்தவும் இல்லத்தரசிகளின் தோழியாக இருக்கிறது. சமையல் பாத்திரத்தின் பரிணாம வளச்சிகளில் இதுவும் ஒன்று. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, சமையலில் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஆண்களின் பெரும்பாலான நபர்களுக்கு உதவியாக இருப்பது இதுதான். விசில் எண்ணிக்கையை பொறுத்து சாதம், பருப்போ வெந்து விட்டது என்று கணித்து விடலாம். பிரஷர் குக்கரில் சமைக்கும் நேரம் மிச்சமாகும் என்பதால் மட்டுமே அது பற்றிய தெளிவு […]

வரலாற்றை மாற்றிய புகைப்படம்!

அமெரிக்காவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் மைல்கள் பயணித்து குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையை ஆவணப்படுத்தியவர் புகைப்படக் கலைஞர் லூயிஸ் ஹைன். மேலே உள்ள இந்தப் புகைப்படம் பற்றி, “மிகச் சிறிய குழந்தைகள் வேலை செய்கிறார்கள். அதிகாலை 3:30 மணிக்கு வேலையைத் தொடங்கி, மாலை 5 மணி வரை வேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது” என்று எழுதினார். சிகாகோவிலிருந்து புளோரிடா வரை நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைகளை புகைப்படங்களாகப் பதிவுசெய்தார். இந்தப் புகைப்படங்கள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக […]

சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆர்பிஐ அங்கீகாரம்!

சென்னையில் செயல்பட்டுவரும் ‘டைக்கி’ என்ற கட்டணம் திரட்டும் (Payment Aggregator) ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கையளவில் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் கிடைத்திருக்கிறது. தமிழகத்திலேயே இந்த உரிமம் பெற்ற ஒரே நிறுவனமாக அது பெருமை பெற்றுள்ளது. இதுபோன்ற ரிசர்வ் வங்கியின் முயற்சிகள் சாமான்ய மக்களுக்கும், தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கும் பாலமாக தொடர்புகளை ஏற்படுத்தி அமைப்புசாரா தொழில் பிரிவில் நல்லிணக்கம் ஏற்பட வழிவகுக்கிறது. சென்னையைச் சார்ந்த ‘பேசிஸ்பே’ என்ற தொழில் நிறுவனத்தின்கீழ் உள்ள ‘டைக்கி சொலுஷன்ஸ் (பி) லிட்’ […]

வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்துங்கள்!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! முக்காலமும் உணர்ந்த துறவி அவர். கடவுளைத் தொடர்ந்து தியானித்ததால், பெரும் வலிமை பெற்றிருந்தார். அவர் உருகித் தியானித்தால், கடவுளே நேரில் வந்து நிற்குமளவு சக்தி படைத்தவர். ஆற்றங்கரையோரம் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவர்மேல் சுற்றுப்பட்டு கிராம மக்கள் மிகுந்த பாசத்துடன் இருந்தனர். சாமியின் வரவால், கிராமமே செழிப்பாக இருக்கிறது என்பது அவர்களின் நம்பிக்கை. ஒருநாள், அவர் நித்திரையில் இருந்தபோது, ஆசிரமக் கதவு தடதடவென தட்டப்பட்டது. நித்திரை கலைந்த கோபத்தில் கதவைத் திறந்தவர், […]

யாருக்காக, என்ன சூழலில் பேசுகிறோம் என்பது முக்கியம்!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! பணி முடிந்தும் ஐ.டி. கார்டை கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு வருவோரைப் பார்க்கும்போது, ‘அடப்பாவமே.!’ என்றிருக்கும். இந்தக் குருவின் கதையும் அப்படியானதுதான். ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரைப் பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். […]