டெல்லி ஜந்தர் மந்தரும் தமிழ்நாட்டு மெரினாவும்!

கடந்த 10-ம் தேதி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலகக் கோரி, போராட்டத்திற்கென்று அனுமதிக்கப்பட்ட டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெரும் திரளாகப் பலரும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முனைந்தனர்.   அப்போது நடந்த கடுமையான ஒடுக்குமுறையை டெல்லி வாழ் மக்களும் ஊடகம் வழியாக இந்திய மக்களும் நன்கு அறிவார்கள்.   டெல்லியில் இத்தகைய போராட்டங்கள் நடப்பது இது முதல் முறை அல்ல. இதுவரை பல போராட்டங்கள் இதே ஜந்தர் மந்தர் பகுதியில் நடத்தப்பட்டிருக்கின்றன.   சில மாதங்களுக்கு முன்பு […]

அரசியலில் எம்.ஜி.ஆர். கடந்து வந்த பாதை!

தேர்தல் சமயங்களில் பலரும் எம்.ஜி.ஆர். பெயரைப் பயன்படுத்துகிறார்கள். தேசியக் கட்சியிலிருந்து, துவங்கிய கட்சி, இனித் துவக்கப்பட இருக்கிற கட்சி வரை அதில் அடக்கம். காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி ‘காமராஜர் ஆட்சி’ என்று பேசுவது மாதிரியே பலரும் ‘எம்.ஜி.ஆர். ஆட்சி’ பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சட்டென்று ரசாயன மாற்றம் போல நிகழ்ந்துவிடவில்லை எம்.ஜி.ஆரின் அரசியல் களம். தொடக்கத்தில் காங்கிரஸ் ஈடுபாட்டுடன் கதராடை அணிந்திருந்த அவர் பிறகு திராவிட இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு அதன் ஆதரவாளராகிறார். அண்ணாவுடன், கலைஞர் கருணாநிதி, […]

இப்படியும் மூளையை ஆய்வு செய்கிறார்கள்!

என்னதான் நவீனத் தொழில்நுட்பங்கள் அதிகப்பட்டாலும், ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பெருமளவு அதிகரித்தாலும், இன்னும் மனித மூளை என்பது தொடர்ந்து ஒரு ஆய்வுப் பொருளாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. முன்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலுள்ள மைக்ரோ பயாலஜி பிரிவில், மூளையின் செயல்பாடுகள் பற்றியும் மரபணு பற்றியும் பல்வேறு நுண்ணிய ஆய்வுகள் நடந்திருக்கின்றன.  பல ஜீவராசிகளை வைத்து பல சோதனைகளும் அங்கு நடந்தன. குறிப்பாக வௌவால்களை வைத்தும், சிறு பறவைகளை வைத்தும் அந்த மரபணு சம்பந்தமான சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதிகாலை நேரத்தில் […]

இடைத்தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது?

திணிக்கப்பட்ட தேர்தல் என்று எதிர்க்கட்சிகளால் சொல்லப்பட்ட இந்த மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்து வழக்கம் போலவே பெரும் சலனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.   தவெக வெற்றி பெறும் என்பது சிலரால் கணிக்கப்பட்டாலும் எப்படியும் தவெக வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகள் சார்பாக பேசிய ஊடகங்களும், முதல்வர் விஜய்க்கும் தவெகவுக்கும் எதிரான பிரச்சாரத்தை வழக்கம் போலவே செய்து கொண்டிருந்தன.   ஆனால், அதில் குறிப்பிட்ட அளவுக்கு மீறி கடுமையான பிரச்சாரம் எதிர்க்கட்சிகள் […]

தமிழகத் தேர்தல் களத்தில் ‘நாய்கள்’ படும் பாடு!

தேர்தல் அரசியலில் நாய்களுடன் சிலரை ஒப்பீடு செய்து பேசப்படுவது அவ்வப்போது நடந்திருக்கிறது என்றாலும், சமீபகாலமாக நாய்களை குறிப்பிட்டுப் பேசுவது தமிழக அரசியலில் அதிகரித்திருக்கிறது.   சென்னை கொளத்தூர் தொகுதியில், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்த பிறகு அந்தத் தொகுதியில் அவருக்கு வாக்களிக்காத மக்களை “நன்றி மறந்த நாய்கள்” என்று விமர்சிக்கிற அளவிற்கு திமுக சார்பாக பேச வந்தவர்கள் அடுத்தடுத்து பேசிக்கொண்டே இருந்தார்கள்.   மிக அண்மையில் நடந்த இந்த இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையின் […]

ஞானேஷ்குமார் மீதான புகார்: திமுகவின் நிலை என்ன?

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ்குமாருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து அவர் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி இயக்கத்தினரும் கூடவே காங்கிரஸ் இயக்கமும் பெரும் போராட்டத்தையும் பேரணியையும் முன்னெடுத்தபோது, அதில் திமுக போன்ற கட்சிகள் பாராமுகமாகவே இருந்தன.   அதேசமயம், திமுகவில் உள்ள சிலர் ஞானேஷ்குமாரின் பொறுப்புக்குக் கீழ் தேர்தல் ஆணையம் வந்த பிறகு நடந்த பல்வேறு தேர்தல்கள் எப்படி நடந்திருக்கின்றன என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு, மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கின்ற வேண்டுகோளையும் முன்வைத்தனர். […]

vels
vels
vels
vels
vels
vels
vels