பார்வைத் திறனை அதிகரிக்கும் பொன்னாங்கண்ணி!

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையை மிக முக்கியமான ஒன்றாகக் கூறலாம். அந்த அளவுக்கு அதில் சத்துக்கள் நிறைந்துள்ளன. பொன்னாங்கண்ணி கீரையைச் சாப்பிட்டு வந்தால் பகலில், வானத்தில் தெரியும் நட்சத்திரங்களைத் தெளிவாகக் காணலாம் என்பார்கள்.

இன்னும் ஏன் இந்த சாதி சார்ந்த பாரபட்சம்?

ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சலூனில் கூட அனுமதி மறுப்பது இந்த நவீனயுகத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. தற்போதுவரை நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரியான நவீன தீண்டாமைக்கு நாம் வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிவப்புக் கடல்!

தாய்லாந்தில் உள்ள நோங் ஹான் கும்ப வாபி ஏரியை, ‘சிவப்பு கடல்’ என்று அழைக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை, 8 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி முழுவதும் செந்தாமரைகள் பூத்திருக்கின்றன. இந்த ஏரியில் பூத்திருக்கும் செந்தாமரைகளைக் காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள்வருகிறார்கள். செந்தாமரைகளைப் பார்ப்பதற்கு அதிகாலை ஏற்ற நேரம். பூக்கள் முழுவதுமாக    விரிந்திருக்கும். அதனால் பகல் முழுவதும் இந்த ஏரி பரபரப்பாகவே இருக்கிறது. சிறிய கட்டுமரம், படகுகளில் செந்தாமரைகளுக்கு […]

என் மீது எப்படி வழக்கு வர முடியும்?

பரண் :  கேள்வி : ‘’வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா போன்றவர்கள் மீது வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதே மாதிரி பார்த்தால், நீங்கள் உட்படப் பல அரசியல்வாதிகள் மீதும் வழக்குகள் வர முடியாதா?’’ பதில் : “எப்படி வரமுடியும்? நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது சொத்து வந்த வழியைக் காட்ட முடியாமல் ஏதாவது சொத்து சேர்த்திருக்கிறோமா? என்னுடைய வருமான வரிக் கணக்குகள் ஒழுங்காக இருக்கின்றன. முறையாக வருமான வரி கட்டி வந்திருக்கிறேன். நான் எவ்வளவு […]

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!

அருட்பிரகாச வள்ளலார் 200-வது பிறந்தநாளையொட்டி எழுத்தாளர் மணா எழுதிய தமிழகத் தடங்கள் நூலிருந்து ஒரு மீள் பதிவு. “பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்”- வள்ளலார். சென்னையில் நெரிசல் அதிகமான ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் இருக்கிறது அந்த வீடு. ஒண்டிக் குடித்தனங்கள் நிறைந்த வீட்டின் மாடியில் வாழ்ந்திருக்கிறார் வள்ளலாரான இராமலிங்க அடிகள். உள்ளே போனதும் எளிமையான ஹால். ஓரத்தில் வெளிச்சம் அணுகாத ஓா் அறை. அதில் விளக்கு ஒளிர்கிறது. வள்ளலாா் 32 ஆண்டுகள் […]

கலைஞர் வாழ்வில் மறக்கமுடியாத நாளன்று!

2001 ஜூன் மாதம் 30 ஆம் தேதி. கலைஞர் வாழ்வில் மறக்கமுடியாத நாள். அன்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் கலைஞர். அன்றைய தினம் காலையில் தான் சன் டிவி செய்தியாளரை அரசு நடத்திய வித‍த்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதான எண்பது பத்திரிகையாளர்களில் நானும் ஒருவன். கைது செய்யப்பட்டு சேப்பாக்கம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எங்களைப் பார்க்க வந்திருந்தார் கலைஞர். அன்றிரவே அவர் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல் வந்ததும், மாலையில் விடுவிக்கப்பட்ட நான் கலைஞரின் […]