இட்லியை முந்திய தோசை!

உலகிலேயே 10ஆவது சிறந்த உணவாக நம்ம ஊர் தோசைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தி டேஸ்ட் அட்லாஸ் என்ற உணவு நிபுணத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் சிறந்த உணவாக (best pancake) தோசை தேர்வாகியுள்ளது. என்னடா இது, நம்ம இட்லிக்கு வந்த சோதனை.

காரசாரமான செட்டிநாடு புடலங்காய் வடை!

மாலை நேரம் வந்து விட்டால் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடும். விதவிதமான நொறுக்குத் தீனிகள் கடைகளில் இருந்தாலும் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடத் தான் நாம் அனைவரும் விரும்புவது. சர்க்கரை நோயாளிகளின் தோழனாக அழைக்கப்படும் பாம்பு புடலங்காய் ஒரு சிலருக்கு இதன் வாடை பிடிக்காமல் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். புடலங்காய் கூட்டு, பொரியல், உசிலி போன்ற ஒரே மாதிரியான சமையலும் அலுப்பு தட்டி விட காரணமாக இருக்கிறது. எல்லோரும் விரும்பி சாப்பிடும் வகையில் […]

சாம்பாரையும், போளியையும் அறிமுகப்படுத்தியவர்கள் யார்?

சாம்பார் – கிட்டத்தட்ட தமிழர்களின் உணவு வகையிலும், திருமண விழாக்களிலும் தவிர்க்க முடியாமல் இடம் பெறும் ஒரு குழம்பு வகை. இதை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் மராட்டியர்கள். குறிப்பாக அப்போதைய தஞ்சை மராட்டிய மன்னரான சாம்போஜி. பருப்பு எல்லாம் போட்டு வித்தியாசமான கலவையாக அன்று உருவான சாம்பாரின் சுவை எல்லோருக்கும் பிடித்துப் போக, சாம்பாரின் மணமும், சுவையும் பரவிவிட்டது. அதைப் போலவே ‘போளி’ யையும் அறிமுகப்படுத்தியவர்கள் மராட்டியர்கள்தான். சாப்பிடத் தெரிந்த எங்களுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா என்கிறீர்களா? […]

இட்லி பற்றி தெரிந்துகொள்ள இவ்ளோ தகவல்களா?

தென்னிந்தியாவில் உட்கொள்ளப்படும் காலை, இரவு நேர உணவுகளில் தவிர்க்க முடியாத உணவுப்பொருள் இட்லி. அரிசி, உளுந்தம் பருப்பு என தானியம் மற்றும் பருப்பு கலவையில் தயாராகும் இட்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எளிதில் செரிமானம் ஆவதோடு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருப்பதால் தென்னிந்தியாவை கடந்து உலகம் முழுவதும் இட்லி பிரபலமாகிவிட்டது. உலக இட்லி தினம் கொண்டாடும் அளவுக்கு அதன் புகழ் உயர்ந்துவிட்டது. சமீபத்தில் உலக இட்லி தினம் (மார்ச் 30) கொண்டாடப்பட்ட நிலையில், இட்லி பற்றிய இனிமையாக தகவல்கள் […]

இட்லி, தோசைக்கு ஏற்ற பருப்பு இல்லாத சாம்பார்!

பரபரப்பான காலை வேளையில் டிபனுக்கு இட்லியா, தோசையா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கா.. அதற்கு ஏற்றவாறு தொட்டுக்கொள்ள என்ன செய்யலாம் என்று முடிவுக்கு வருவதற்குள் மணி 7.30 தாண்டி விடும். அய்யய்யோ நேரமாச்சு என்று சட்னி அரைக்கலாம் என்று பார்த்த தினமும் சட்னியா? முனுமுனுப்பு வேற கேட்கும். சாம்பார் வைக்கலாம்னு பார்த்த பருப்பு வேக நேரமாகும் என்ன செய்யலாம்? பருப்பு இல்லாத சாம்பார் வைக்கலாம். அவசரமான காலை பொழுதில் சட்னிக்கு பதிலாக 15 நிமிடத்தில் சுவையான […]

மாம்பழ சீசன்; சுவையான ரெசிபிகள் ரெடி!

தட்பவெப்ப காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றது போல் இயற்கை நமக்கு காய்கறிகள், பழங்களை வழங்குகிறது. அந்தந்த காலங்களில் கிடைக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. இந்த கோடைக்காலத்தில் இயற்கை நமக்கு வழங்கிய அற்புதமான பழங்களில் ஒன்று மாம்பழம். இந்த மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தாமிரம் மற்றும் ஃபோலேட் ஆகிய ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல வைட்டமின்கள் அடங்கியது மாம்பழம். இப்போது மாம்பழத்தை கொண்டு பலவிதமாக ரெசிபிகள் எப்படி […]