தமிழ் சினிமாவுக்கு திருப்புமுனை தந்த ‘நல்ல தம்பி’!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் மாணவனாக இருந்த சமயம். அப்பொழுது அண்ணாவின் சொற்பொழிவுகளை கேட்டேன். திராவிட முன்னேற்றக் கழகம் கூடத் தோன்றியிராத காலம் அது.   பொதுக்கூட்டங்களிலும் மாணவர் கூட்டங்களிலும் அண்ணாவின் பேச்சைக் கேட்க நேர்ந்த போதெல்லாம் இவர் நிச்சயம் ஒரு பெரிய தலைவராக வரப்போகிறார் என்று நான் கருதுவேன்.   அண்ணாவின் அரசியல் எழுச்சியையும் கலையுலக எழுச்சியையும் தள்ளி நின்று ரசித்த பல்லாயிரக்கணக்கான பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.   அடுத்து ‘நல்லதம்பி’ படம் பார்த்தேன். […]

நம்பிக்கையை ஊட்டி வளர்த்த தாய்!

வாசிப்பின் ருசி : குழம்பு வைக்க காசில்லாத நாட்களில் உண்ண முகம் சுழித்த என்னிடம் “நாமும் நல்லாயிருப்போம்டா” என்ற சொற்களை சோற்றில் ஊட்டி வளர்த்தாள் என் தாய்! – இயக்குநர் சீனு ராமசாமி

கர்ணன் என்று தான் பெயர் வைத்திருக்க வேண்டும்!

கலைவாணர் என்.எஸ்.கே அவர்களின் திரைப்பட நிறுவனத்தின் கணக்கு வழக்கு பார்க்கும் ஒரு கணக்காளர், வருமான வருவாய் அதிகாரி ஹனுமந்த ராவ் சந்தித்து, அந்த கணக்கு – வழக்குகளைக் கொண்டு வந்து காண்பித்தார். அதைப் பார்த்த அதிகாரி ஹனுமந்த ராவ், “என்னயா நிறைய தர்மம், தர்மம்-னு கணக்கு எழுதிருக்கு. எப்படி நம்புறது?” என்று கேட்டுள்ளார். என்னெனவோ சொல்லியும் அவர் நம்பாததால், இப்படி சொல்லியுள்ளார். “சார் நீங்க வேணா இப்ப நேரா போய் என்.எஸ்.கே-வை பாருங்க. உங்களை யாருன்னு சொல்லிக்காம, […]

இந்தியப் பெண்களின் விடுதலைப் போராடிய ஐரோப்பியர்!

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர் அன்னி பெசன்ட். எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்டக்காரர், பிரம்மஞான சபையை இந்தியாவில் நிறுவியவர் என்று பல்வேறு பரிமாணங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியவர். முற்போக்கு எண்ணங்களைக் கொண்டிருந்த அன்னி பெசன்ட், மகள் நோய்வாய்ப்பட்டபோது நாத்திகராக மாறினார். மதத்தின் மீது தீவிரப் பற்றுகொண்ட கணவருடன் அவரால் சேர்ந்து வாழ இயலவில்லை. படித்தார்; பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்துப் பரப்புரை செய்தபோது, எதிர்ப்புகளைச் சம்பாதித்தார். ‘லிங்க்’ பத்திரிகையில் அயர்லாந்திலும் […]

உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டிய தமிழன்!

எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பல களங்களில் இயங்கிய வெ. சாமிநாத சர்மா, “நான் எழுதுவதற்காக வாழ்கிறேன். வாழ்வதற்காக எழுதவில்லை” என்று அறிவித்தவர்.   உலக நாடுகள், தலைவர்கள் பற்றியும், உலக இலக்கியங்கள் பற்றியும் தமிழ் வாசகர்களுக்கு விரிவாக அறிமுகம் செய்தவர்.   கடித இலக்கியம், குறுநாவல், சிறுகதைகள், வாழ்வியல், இதழியல், மொழிபெயர்ப்பு எனப் பல்துறை வழியே தமிழுக்குத் தொண்டாற்றியவர்.   இவர் எழுதிய நூல்கள் சுமார் 80. படைப்பிலக்கியத்திற்கும் கணிசமாகப் பங்களித்திருக்கிறார். எனினும் இவர் நினைவுகூரப்படுவது […]

மனிதம் பாடிய மாமனிதரைக் கொண்டாடுவோம்!

நூல் அறிமுகம் : திருக்குறள் இன்பத்துப்பால் ஊட்டும் உணர்வுகளை, தற்காலப் பின்னணியில் புதுக்கவிதைகளாகவும், நாட்டுப்புறப் பாடல் வடிவிலும் அவ்வப்போது எழுதிப் பதிவிட வள்ளுவர் குடும்பத்தின், ‘வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்’ என்ற சமூக ஊடகக் குழு (முதலில் ‘வாட்ஸ் அப்’, இப்போது ‘டெலிகிராம்’) எனக்கு மேடை அமைத்துக் கொடுத்தது. இல்லையென்றால் என்மட்டில், இது சாத்தியமாகி இருக்காது. அவ்வாறு பகிர்வு செய்த பதிவுகளில், ஏழு நாட்டுப்புறப் பாடல்களுக்கு இசையமைப்பாளர் தாஜ் நூர் அருமையாக இசை அமைத்துள்ளார். மிகத்தேர்ந்த பின்னணிப் பாடகர்கள், […]