நீலத்திமிங்கலமும் பிரமாண்ட தகவல்களும்!

நீலத்திமிங்கலம்தான் உலகிலேயே மிகப்பெரிய விலங்கு. டைனோசர்களை விடப் பெரியவை இந்த திமிங்கலங்கள். நீலத்திமிங்கலம் பற்றி சில தகவல்கள்… * ஒரு நீலத்திமிங்கலத்தின் எடை சராசரியாக 30 வளர்ந்த யானைகளின் எடைக்குச் சமமாக இருக்கும். * நீலத்திமிங்கலம் கடலில் வாழும் பாலூட்டி வகையைச் சார்ந்தது. * இது 80 முதல் 100 அடி வரை நீளம் கொண்டிருக்கும். * இதன் எடை 150 டன்கள் வரை இருக்கும். *நீலத்திமிங்கலத்தின் குட்டி பிறக்கும்போதே 2 டன்கள், அதாவது 2 ஆயிரம் […]

கனிவும் கருணையும் கொண்ட எழுத்து!

நூல் அறிமுகம் : ஹெர் ஸ்டோரிஸ் இணையதளத்தில் நானாக நான் தலைப்பில் வெளியான கட்டுரைத் தொடர் பாதைகள் உனது பயணங்கள் உனது என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. “எல்லா பெரிய விஷயங்களுக்கும் சிறிய தொடக்கமே இருக்கிறது என்பார்கள். அப்படி தொடங்கிய சிறு முயற்சிதான் இந்த கட்டுரைத் தொகுப்பு. ஆண்டாண்டு காலமாக மனத்துக்குள் அடக்கி வைத்திருக்கும் புழுக்கங்கள், ஆற்றாமைகள், இயலாமைகள், சமூக அவலங்கள், குடும்ப வன்முறைகள் எனப் பலவும் இயல்பாக எழுத்துகளாக உருமாறின. பாலினச் சமத்துவம் என்ற ஒற்றைச் சரடைக் […]

2 ஆண்டுகளில் தமிழைக் கற்று இலக்கியம் படைத்த சீகன்பால்கு!

ஜெர்மனியில் வாழும் ஆய்வாளர் சுபாஷினி, தங்கம்பாடி சென்றுவந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “1706 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் இருந்து தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்த பார்த்தலோமஸ் சீகன்பால்க் தன்னை தமிழ் மண்ணுக்கு வந்த பிறகு ஒரு தமிழ் மாணவனாக மாற்றிக் கொண்டார். இரண்டே ஆண்டுகளில் தீவிரமாக தமிழைக் கற்று 1710 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கும் மற்றும் பெண் குழந்தைகளுக்கும் பள்ளியை உருவாக்கினார். அதே ஆண்டு அவர் உருவாக்கிய அச்சகத்திற்கு இங்கிலாந்தில் இருந்து அச்சு எந்திரம் […]

மொழி உணர்ச்சியும், இன உணர்ச்சியும்!

அண்மையில் மறைந்த எழுத்தாளரான பா. செயப்பிரகாசம் இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர் தன் வாழ்நாள் இறுதி வரை அதில் தீவிரம் காட்டியவர். மொழிப் போராட்ட அனுபவம் பற்றி அவர் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை இதோ. **** 1965 ஜனவரி 25 இல் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து மாணவர் போராட்டம் தொடங்கியது. இன்றைய மாணவர் போராட்டம் போலவே அன்றைக்கு நாங்கள் இருபது வயதுகளில் இருந்தோம். இப்போது அறுபது வயதாகிறது. அன்றைய அறுபதுகள் நாங்கள் […]

ஜெயமோகனின் தனிமொழிகள்!

டைரியைப் புரட்டும்போது சிலசமயம் உதிரிவரிகள் தென்படுகின்றன. கவிதையாக மாற முடியாதபடி சிறியவை, கதையில் உறுப்பாக மாற முடியாத அளவுக்கு தனியானவை. இவற்றை ஆங்கிலத்தில் அஃபோரிசம் (aphorism) என்கிறார்கள். இது எப்போதுமே ஒரு வரிதான். கவித்துவம், ஒருவகை விவேகம் அல்லது நகைச்சுவை வெளிப்படுவதற்குரியது இவ்வடிவம். இவை பெரும் பாலும் எழுதி சில நாட்கள் கழிந்ததுமே ஒளி இழந்துவிடுகின்றன. சில வரிகள் நமக்கு மட்டுமே பொருள்படுகின்றவையாக உள்ளன. ஒருபோதும் பிறவற்றுடன் சேராதிருத்தல் இவற்றின் அடிப்படை இயல்பென்பதால் குவித்து வைத்து படிக்கும்போது […]

தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை!

குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை: இளைய பருவப்பிள்ளைகளுக்கு மனம் புண்படும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது தன்னம்பிக்கையை இழக்க செய்து அவர்களை முடக்கி போட்டுவிடும். குழந்தைகளுக்கு சிறந்த கல்வி , உணவு, உடை தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது மட்டுமே பெற்றோரின் கடமையல்ல, வளரிளம் பருவத்தில் உள்ள தங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வழிகாட்டுவதும் முக்கிய கடமைதான். இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்கள் சுற்றி […]