யார் அந்த கருப்பாடுகள்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

தவெக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு தரப்பினர் அடிக்கடி சந்தித்து வரும் பிரச்சினைகளில் மின்தடையும் முக்கியமான பிரச்சினையாக மாறியிருக்கிறது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் இந்த இத்தகைய மின்தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.

முக்கியமாக முன்னாள் முதல்வரான ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி அடையாத கொளத்தூர் தொகுதியில் தற்போதுவரை தொடர்ந்து அதிகப்படியான மின்வெட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது.

தற்போது கோடைகால வெப்ப நிலை அதிகரித்திருப்பாக சொல்லப்படும் நாட்களில் இத்தகைய மின்தடை பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

சமயங்களில் மின்தடை ஏற்பட்டு அதை சரிசெய்ய சுமார் 4-லிருந்து 5 மணி நேரம் வரை ஆகிறது. இதற்கு இத்தகைய மின்தடை ஏன் ஏற்படுகிறது?

அதிலும் குறிப்பாக முன்னாள் முதல்வரின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஏன் அடிக்கடி இத்தகைய மின்தடை ஏற்படுகிறது?

இதற்கு விளக்கம் அளித்திருக்கிற தமிழக மின்சாரத்துறை அமைச்சரான நிர்மல் குமார், “மின்சாரத் துறையில் பணியாற்றும் சில கருப்பாடுகள் இத்தகைய மின்தடையை ஏற்படுத்துகிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

அரசியல் உள்நோக்கத்தோடு இத்தகைய மின்தடை உருவாக்கப்படுகிறது என்று நாம் புரிந்து கொண்டால், இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் சராசரி மக்கள் தானே.

இதே கொளத்தூர் தொகுதியில் வாக்களித்த வாக்காளர்கள் குறித்து கடுமையாக கேடு கெட்டவர்கள் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

இது மாதிரியான விமர்சனங்கள் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி மக்களை குறிவைத்து பேசப்பட்டு வரும் நிலையில்தான், தற்போதுவரை தொடர்ந்து மின்வெட்டு பகல் வேளையிலும், இரவு வேளையிலும் நீடித்து வருவதையும், அதே தொகுதியில் குடியிருக்கும் மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

எந்தத் தொகுதியாக இருந்தாலும் அது முன்னாள் முதல்வர் போட்டியிட்ட தொகுதியாக இருந்தாலும்,

அந்தத் தொகுதியில் வாக்களித்தவர்கள் மீது அரசியல் ரீதியாக பழிவாங்கப்படும் நிகழ்வாக இத்தகைய மின்தடை ஏற்படுகிறது என்று தற்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும்,

இத்தகைய நிலை எந்த விதத்திலும் அதிலும் மின்தடை விஷயத்தில் அமைச்சர் குறிப்பிடுகிற மாதிரி கருப்பாடுகள் புகுந்து சில பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள் என்கின்ற வாதத்தை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

வாக்களித்த மக்கள் விழிப்பாகத்தான் இருக்கிறார்கள். மின்தடை விஷயத்தில் எத்தகைய நியாயப்படுத்தல்களும் இல்லாமல் மின்தடை இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டிய பொறுப்பு தற்போதைய ஆளும் கட்சிக்கு இருக்கிறது.

இத்தகைய மின்தடை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், ஏற்கனவே தவெகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அரசு தரும் எதிர்வினையா இத்தகைய மின்தடைகள் என்கின்ற ஒரு குற்றச்சாட்டு வந்து விடாதா?

அரசு பரிசீலிக்கட்டும்.

– அரவிந்தன்

You might also like