எழுத்தாளராக வெற்றிகண்டவர் ஜெயகாந்தன் மட்டுமே!
எனக்கு 24 வயது இருக்கும்போது ஜெயகாந்தனை அவரது மடத்தில் நான் சந்தித்து இருக்கிறேன். நான் நடத்திய ‘வெளிச்சம்’ இதழுக்கு நேர்காணல் செய்வதற்காக முதல்முதலாகச் சென்றேன். அப்போது அவர் ஒரு லுங்கியில் வெற்றுடம்போடு தரையில் படுத்துப் புரண்டு கொண்டிருந்தார். நண்பர்கள் தரையில் அவரைச் சுற்றி அமர்ந்தபடி சிலும்பி அடித்துக் கொண்டே உரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள். (அந்த சுவாரஸ்யமான உரையாடல் பற்றி அப்புறம் சொல்கிறேன்.) தேவபாரதி, புலவர் த.கோவேந்தன் போன்றவர்கள் என்னைவிட மூத்தவர்கள் என்றாலும் என் நண்பர்கள். 1991இலிருந்து 1996 வரை […]
இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்!
பேரா. சி. இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள் கட்டுரையின் தொடர்ச்சி: ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள் : அமைச்சர் யார் (1949), எல்லோரும் இந்நாட்டரசர், திருக்குறள்-எளிய பொழிப்புரை (1963) வள்ளுவர் வகுத்த அரசியல் (1968), வள்ளுவர் கண்ட இல்லறம் (1971) எனத் திருக்குறளுக்குச் சிறப்பான உரையும் விளக்கங்களும் எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம். 1. எளிமை, 2. நுண்மை, 3. பகுத்தறிவுப் பார்வை, 4. தமிழ் நெறிப் பின்புலம், 5. பெண்ணுரிமை பேணல், 6. உரையாளர் […]
தமிழ்ப் பேரறிவுக் களஞ்சியங்களைப் பாதுகாப்போம்!
சங்க இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்தளவுக்கு உலக செவ்வியல் மரபில் நிற்கக்கூடிய தகுதி வாய்ந்தது தமிழ்.
இன்றைய தமிழ் இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது?
தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான இந்திரா பார்த்தசாரதி நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். ‘குருதிப் புனல்’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். இவருடைய பெரும்பாலான நாவல்கள் உயர், நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. அங்கதம் நிறைந்தவை. அலுவலக (அரசு) வேலை பார்க்கும் கதை மாந்தர்களைக் கொண்டு பெருநகர […]
அழகும் அழுக்கும் நிறைந்த உலகம் இது!
நான் எழுதிய முதற்கதையும் சரி, இனிமேல் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளாகவே இருக்கும். கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியை வாசகர்கள் காணலாம். ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைகளாகவே இருக்கும். ஒருபுறம் அழகும் வனப்பும் நிறைந்த இயற்கை உலகம், மற்றொருபுறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள். இவைதான் என் கதைகளின் கருத்து நிலை என்றும் சொல்லலாம். – எழுத்தாளர் அகிலன்.
எழுத்தென்பது மௌனத்திற்கு எதிரான கலகம்!
தனது நாவலில் பண்டிட் பியாரி லால் எனும் கதாபாத்திரம் ஒன்று தனது பழத்தோட்டத்தில் இறந்து போகிற காட்சியை எழுதுகிறபோது சல்மான் ருஷ்டியினால் அதைத் தாங்கவே முடியவில்லை.
மேஜையில் அமர்ந்து அழத் தொடங்கி விட்டார்.










