செய்தி:
மேகத்தாட்டு அணை கட்டும் விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்!
– தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்.
கோவிந்த் கமெண்ட்:
மேகத்தாட்டு அணை அடிக்கடி கர்நாடகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் கட்சிகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டு, அது உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கும் போயிருக்கிறது. சில வழிகாட்டு முறைகளும் தரப்பட்டிருக்கிறது.
இருந்தும் கர்நாடகாவில் நிகழும் உள்ளூர் அரசியல் காரணமாக மீண்டும் இந்த மேகத்தாட்டு பிரச்சனை தற்போது கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றிருக்கிற பி.கே.சிவக்குமாரால் எழுப்பப்பட்டிருக்கிறது.
ஆனால், தேசியக் கட்சியில் தமிழகத்தில் ஒருவிதமாகவும், கர்நாடகத்தில் ஒருவிதமாகவும் குரல் கொடுக்கின்றார் என்பதுதான் தேசிய சிக்கலாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது. இதைத்தான் மார்க்சிஸ்ட் கட்சியும் வெளிப்படுத்தி இருக்கிறது.
தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கிற மேகத்தாட்டு அணைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பிரச்சினையில் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என்கின்ற பாகுபாடின்றி அனைவரும் ஒரே அணியில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அப்படி ஓரணையில் நிற்பார்களா?