ஜானகி நூற்றாண்டு விழா கொண்டாடுவதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்!

டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் உறவினரும், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவருமான முனைவர். குமார் ராஜேந்திரன் வெளியிட்டிருக்கிற அறிக்கை. சென்னையில் நேற்று (26.12.2023) கூடிய அதிமுக இயக்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டிருப்பதற்கு புரட்சித் தலைவர் அவர்களின் கோடிக்கணக்கான தொண்டர்கள் சார்பிலும் மக்கள் திலகத்தின் குடும்பத்தார் சார்பிலும் ஜானகி அம்மையார் குடும்பத்தார் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் […]

என்றும் இனிக்கும் ‘பல்லாண்டு வாழ்க’!

ஒரு படத்தின் டைட்டில் முதல் தியேட்டரில் வெளியானபின் கிடைக்கும் வரவேற்பு வரை, அனைத்திலும் கவனம் செலுத்திய திரை நட்சத்திரம் எம்ஜிஆர். அந்த காலகட்டத்தில், நடிப்பு மட்டுமல்லாமல் இதர துறைகளிலும் அவரைப் போன்று ஈடுபாடு காட்டியவர்கள் எவருமில்லை என்றே சொல்லலாம். சமகாலத்தில் மட்டுமல்லாமல், எதிர்காலத் தலைமுறையினரும் ரசிக்கும் விதமாகப் படைப்பைச் செதுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதி காட்டினார். அதனாலேயே, இன்றும் அவரது படங்கள் பொழுதுபோக்கு அம்சத்தில் நமக்கு எந்தக் குறையையும் வைப்பதில்லை. அதேநேரத்தில், சமூகத்துக்குத் தேவையான தகவல்களையும் […]

எம்.ஜி.ஆர்: கலைத் துறையின் ஒளிமிகுந்த சுடர்!

கலைஞர் கருணாநிதி புகழாரம் அண்மையில் விகடன் வெளியிட்ட ‘கலைஞர் – 100: விகடனும் கலைஞரும்’ நூல் சமகாலத்தின் வரலாற்று ஆவணம். திருக்குவளை பிறப்பு துவங்கி, மெரினா வரை அந்தந்த காலகட்டம் சார்ந்த அரிய புகைப்படங்களுடன் கூடிய தொகுப்பு. வாசிப்பின் ருசி உள்ளவர்களுக்கு அருமையான தீணி. அந்தத் தொகுப்பில் இருந்து சிறுதுளி. ‘மடியில் விழுந்தது ஒரு கனி’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆரைப் பற்றி, கலைஞர் 14.05.1972-ல் எழுதிய கட்டுரை. ****** புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த ஆண்டுக்கான […]

எனக்குப் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர்.!

– கவிப்பேரரசு வைரமுத்து ********** மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் புகழ்வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்தளவிற்கு சினிமாவிலும் அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தவர். திறமையாலும் மக்கள் மீது அவர் வைத்த அளவற்ற அன்பினாலும் அனைவருக்கும் பிடித்த நபராக எம்.ஜி.ஆர் இருந்தார் என்பதே உண்மை. அதனால் தான் அந்தக்கால கட்டத்திலும் சரி இளைய தலைமுறையினருக்கும் சரி மிகவும் பிடித்த நபராக பொன்மனச் செம்மல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் எளிய மக்கள் தொடங்கி பிரபலங்கள், அரசியல்வாதிகள் […]

அண்ணாவிடம் எம்.ஜி.ஆரை அறிமுகப்படுத்திய டி.வி.நாராயணசாமி!

டி.வி. நாராயணசாமி: 100 பராசக்தி துவங்கி மணிமகுடம், திருவிளையாடல் எனப்பல திரைப்படங்களில் இவருடைய முகத்தைப் பார்த்திருக்கலாம். தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்கப்பட்டபோது அதற்காக உழைத்தவர்களில் இவரும் ஒருவர். பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி என்று பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான பழக்கம் கொண்ட இவர்தான் அண்ணாவிடம் எம்.ஜி.ஆரை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தவர். டி.வி.என். என்றழைக்கப்பட்ட டி.வி. நாராயணசாமியின் பங்களிப்பைப் பற்றி அடிக்கடி எழுத்திலும், பேச்சிலும் ‘தன் வாழ்வில் வெளிச்சம் ஊட்டியவராக’ச் சிறப்பாக‍க் குறிப்பிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். காங்கிரஸ் […]

மக்களிடம் சமத்துவம் உண்டாக வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்: ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும் (ஓடி ஓடி)  வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு நான் அன்போட சொல்லுறத கேட்டு நீ அத்தனை திறமையும் காட்டு இந்த அம்மாவ பாரு அய்யாவ கேளு ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க (ஓடி ஓடி)  சோம்பேறியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி சுறுசுறுப்பில்லாமே தூங்கிக்கிட்டு இருந்தா […]