சில்லென்ற அன்பும் நெகிழ்வும்…!
பரண்: டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் திரையுலகில் உயர்த்திய ‘மாலையிட்ட மங்கை” படத்தைத் தயாரித்தவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய இசைக்கச்சேரி ஒன்றில் கண்ணதாசன் பேசும்போது மனநிறைவோடு சற்றுத்தலைகுனிந்த படி டி.ஆர். மகாலிங்கம் இருக்கும் இந்தப் படத்தை, சோழவந்தானுக்கு அருகில் இருக்கும் மகாலிங்கத்தின் சொந்த வீட்டிலிருந்து வாங்கி வந்தேன். அன்றைய நிழல் என்றாலும் எவ்வளவு பசுமையான, அருமையான நிழல்!! – மணா
கலைஞரைக் கடைசியாக சந்தித்த தருணம்!
கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைவிழந்த நிலையில் இருந்தபோது செல்வியும் தமிழும் என்னை கலைஞரிடம் அழைத்துச் சென்று, ”சிவக்குமார் வந்திருக்கிறார்” என்று கூறினார். அவரது முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அப்போது நான், தமிழருவி மணியன் எழுதிய ‘தவப்புதல்வன் சிவாஜி’ என்ற நூலை கையில் கொண்டுபோயிருந்தேன். அதில், ‘மனோகரா’ படத்தில் வரும் சிவாஜியின் வசனமான, “புருஷோத்தமரே…” என்ற வசனத்தை தொலைக்காட்சியில் போட்டு அதிக சத்தத்துடன் வைத்து அவரைக் கேட்க வைக்கலாம் என்று தொலைக்காட்சிப் பெட்டியை அவரது அருகில் வைத்தோம். ஒன்றரை நிமிடம் […]
இந்தியாவில் குருட்டு நம்பிக்கைகள் அதிகம்!
பரண்: பிரமிள் என்றழைக்கப்பட்ட தமிழின் முக்கியமான கவிஞரும், விமர்சகருமான தருமு சிவராமுவிடம் 1979-ல் எடுக்கப்பட்ட நேர்காணலில் இருந்து ஒரு பகுதி. கேள்வி: மேல் நாட்டில் ஆழ்ந்த நுண்மையான விஷயங்கள் எல்லாம் தகுந்த ஆதரவுடன் கவனிப்புக்கு உள்ளாகையில், இங்கு அதுவும் சமய, வேதாந்தக் கருத்துக்கள் வேரூன்றிய நாட்டில் தற்போது கருத்து நுண்மைக்கு ஆதரவில்லாமல் போனதற்குக் காரணம் கூற முடிகிறதா? பிரமிள் பதில்: இந்தியாவில் புத்தர் செயல்பட்ட காலமும், அவரது கருத்துக்கள் உணரப்பட்ட காலமும் தவிர, மற்றைய காலங்களில் குருட்டு […]
இப்படியும் ஒரு ‘குரு’ பக்தி!
மகா வித்வான் மீனாட்சி சுந்தரனார் அவர்களைப் பற்றி வரலாற்று நூலின் முன்னுரையில் உ.வே.சாமி நாதன் அவர்களை இப்படி எழுதி இருக்கிறார். என் ஆசிரியரின் முழுப் பெயரையும் இவ்வளவு நாள் கழித்தும் குறிப்பிட்டு எழுத என் பேனா கூசுகிறது.
மதுவிலக்கு: வாக்கு வங்கியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது!
சர்க்கார் எவ்வளவு தான் சட்டம் போட்டாலும், கள் குடிப்பவன் குடித்துக் கொண்டுதான் இருப்பான்; இறக்குபவன் இறக்கிக் கொண்டுதான் இருப்பான்.
இந்த மதுவிலக்கு – காரியத்துக்குப் பயன்படாது; ஓட்டுக்குத்தான் பயன்படும்.
என் மீது எப்படி வழக்கு வர முடியும்?
பரண் : கேள்வி : ‘’வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா போன்றவர்கள் மீது வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதே மாதிரி பார்த்தால், நீங்கள் உட்படப் பல அரசியல்வாதிகள் மீதும் வழக்குகள் வர முடியாதா?’’ பதில் : “எப்படி வரமுடியும்? நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது சொத்து வந்த வழியைக் காட்ட முடியாமல் ஏதாவது சொத்து சேர்த்திருக்கிறோமா? என்னுடைய வருமான வரிக் கணக்குகள் ஒழுங்காக இருக்கின்றன. முறையாக வருமான வரி கட்டி வந்திருக்கிறேன். நான் எவ்வளவு […]





