செவியில் புகுந்து சிந்தையில் உறையும் இசை!

லால்குடி என்ற ஊருக்கு இரண்டு பெருமைகள் உண்டு. ஒன்று, தியாகராஜ சுவாமிகளால் ‘லால்குடி பஞ்சரத்தினம்’ இயற்றப்பட்டது. மற்றொன்று, ஜெயராமன் என்னும் வயலின் மேதையை இசை உலகத்துக்கு கொடையாகக் கொடுத்தது. சத்குரு தியாகராஜ சுவாமிகளின் நேரடி சிஷ்யப் பரம்பரையில் வந்த ‘பல்லவி’ ராமய்யரின் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஜெயராமன். திருத்தவத் துறை க்ஷேத்திரம் எனப்படும் லால்குடிக்கு சத்குரு தியாகராஜ சுவாமிகள் எழுந்தருளி ‘லால்குடி பஞ்சரத்தினம்’ எனும் பொக்கிஷத்தை இயற்ற வழிவகை செய்ததே இந்த ராமய்யர்தான்! தன்னுடைய தந்தை வி.ஆர். கோபாலய்யரையே […]

‘கிராமிய ஊர்’ ஒன்றை உருவாக்க வேண்டும்!

‘கிராமிய ஊர்’ என்று ஒன்றை உருவாக்க வேண்டும். அங்கே நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கக்கூடிய அத்தனை அம்சங்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

இலக்கியத்துக்கு ஓவியம் எந்தளவுக்கு முக்கியம்?

ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் டிராட்ஸ்கி மருது. 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இந்திய அளவில் பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். உலக அளவில் ‘Best Collections’ பலவற்றில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய அளவில் கணிப்பொறியை பயன்படுத்தும் ஓவியர்களுக்கு இவர்தான் முன்னோடி. கடந்த 15 வருடங்களாக சினிமாத் துறையில் கலை இயக்குநராகவும், அனிமேக்கராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ் வணிகப் பத்திரிகைகளிலும், சிறுபத்திரிகைகளிலும் தொடர்ந்து வரைந்து வருகிறார். கீற்று […]

கலவரச் சூழலுக்கு இடையே கச்சேரி நடத்தினோம்!

‘நாட்டுப்புறப் பாடல் பாடுபவர்’ என்பது மட்டுமின்றி, விஜயலட்சுமிக்கு வேறு பல முகங்களும் இருக்கின்றன. கணவரைப் போலவே, இவரும் பல்கலைக்கழகப் பேராசிரியை. சிறந்த பேச்சாளர். ஒருமுறை, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத் தொடக்க விழாவில், ‘சங்க இலக்கியமும் நாட்டுப்புறப் பாடல்களும்’ என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருக்கையில்… விழாவுக்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் மேடையேறியதும் உடனடியாகச் சுருக்கமாகப் பேசி முடிக்குமாறு வற்புறுத்தப்பட்டிருக்கிறார். ஆனால், இவரது பேச்சிலும் நாட்டுப்புறப்பாட்டிலும் லயித்துப்போன எம்.ஜி.ஆர், இவரைத் தொடர்ந்து பேசச்சொல்ல… விடாமல் இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறார் […]

அருகிவரும் அசலான அன்பு!

இன்றைய நச் :  உண்மையிலேயே அசலான அன்பை காட்டுகிறவர்கள், அடுத்துவரும் தலைமுறையின் நினைவில்கூட தங்காமல் காணாமல் போனவர்களின் பட்டியலுக்குச் சென்றுவிடுவார்கள்.

வாழ்வைப் புரிந்துகொள்ள அதனுள் பயணிக்க வேண்டும்!

கலைப்படைப்புகளில் ஒளிவீசும் அழகியல் அம்சங்களைக் காட்டிலும், அவற்றில் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை, பண்பாட்டுக் கூறுகளே பார்வையாளர் உடனான பிணைப்பை இறுக்கமாக்கும். அவற்றில் வெளிப்படுகிற, உணர்கிற காலவெளியில் நாமே நுழைந்த உணர்வைப் பூரணமாக்கும். அந்த வகையில் கடலையும் கடல் சார்ந்த வாழ்க்கையையும் சொல்லும்விதமாக இருந்தது ‘கொண்டல் – நெய்தல் நிலைக் கலைகள்’ எனும் ஓவியம், ஒளிப்படக் காட்சி. சென்னை லலித் கலா அகாடமியில் ஜூன் 9 முதல் 16 வரை நடைபெற்றது. கடற்புற வாழ்க்கையைச் சொல்வதாக இக்கண்காட்சி அமைந்தபோதும் […]