அரிய டீ பிரேக்…!

அருமை நிழல் : பெருந்தலைவர் காமராஜரும், பேரறிஞர் அண்ணாவும் ஒரு தேநீர் இடைவேளையில்!

வெற்றிக் கூட்டணியின் சந்திப்பு!

அருமை நிழல்: திருமணத்திற்கு முன்னால் நதியா நடித்த கடைசி படம் ராஜாதி ராஜா. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபோது பாவலர் கிரியேஷன்ஸ் ஆர்.டி.பாஸ்கர் நதியாவிற்கு ஒரு விருந்து கொடுத்தார். அந்த விருந்தில் திரைக்கதையாசிரியர் பஞ்சு அருணாசலம், நடிகர் ரஜினிகாந்த்,  நடிகை நதியா, தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றபோது எடுத்தபடம். நன்றி: முகநூல் பதிவு

மாஸ்கோ திரைப்பட விழாவில் எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்: மாஸ்கோ திரைப்பட விழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டபோது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது உடனிருந்தவர் நடிகை லதா.

பிரபஞ்சத்தின் அழகிய படங்களை வெளியிட்ட நாசா!

அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது. ‘ஜேம்ஸ் வெப்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ஜேம்ஸ் வெப்’ […]

50 வயதுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த படங்கள்!

1967க்குப் பின், அதாவது ஐம்பது வயதுக்குப் பின் எம்.ஜி.ஆர் சுமார் 45 படங்களில் நடித்திருக்கிறார். 1963லிருந்தே எம்.ஜி.ஆரின் சினிமா வரைபடம் மேல்நோக்கியே ஏறத் தொடங்கி விட்டது. அந்த வருடம் அதிகமாக 9 படங்கள் வந்தன. அதை ஆரம்பித்து வைத்தது பணத்தோட்டம். அண்ணா எழுதிய கட்டுரைகளின் தலைப்பு. அத்தோடு பணமும் புகழும் ஏராளமாக எம்.ஜி.ஆரை வந்தடைந்தது. 1965இல் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை அவரது ரசிகர்களின் எண்ணிக்கையை பன்மடங்காக்கிற்று. “நான் ஆணையிட்டால்…” என்ற ஒரு பாடல் அவரையும் கட்சியையும் […]

காமிராவுக்குப் பின்னால் மக்கள் திலகம்!

அருமை நிழல் :   * மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பல புகைப்படக் கலைஞர்களுடன் பழக்கம் உண்டு என்றாலும், தமிழக முதல்வராக அவர் கோட்டையில் அமர்ந்தபோது, முதல் படம் எடுக்க உரிமையோடு அவரால் அழைக்கப்பட்டவர் மூத்த புகைப்படக் கலைஞரான ஆர்.என்.நாகராஜராவ். ‘நாடோடி மன்னன்’ படக் காலத்திலிருந்தே பல படங்களுக்காக அவரைப் பல கோணங்களில் படம் பிடித்தவர். இரட்டை இலையைக் குறிக்கும் விதத்தில் எம்.ஜி.ஆர். இரண்டு விரிலை விரித்தபடி காட்டும் பிரபலமான புகைப்படம் இவர் எடுத்தது தான். பல படங்கள் […]