காலத்திற்கேற்ற உத்தரவு!

செய்தி:

தமிழகம் முழுவதும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க நடவடிக்கை!

– பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு.

கோவிந்த் கமெண்ட்:

கோடை விடுமுறை முடிந்து தமிழகமெங்கும் கல்விக் கூடங்கள் திறக்கிற நேரத்தில் இப்படிப்பட்ட உத்தரவு பிறக்கப்பட்டிருப்பதை வரவேற்கலாம்.

ஆனால், எவ்வளவு தூரத்திற்கு தனியார் பள்ளிகள் பெற்றோரைப் பிழிந்தெடுத்து, வசூலிக்கிற கட்டணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேச முன்வருவார்கள்.

இதற்கு கல்விக் கூடங்களைக் கேட்பதைவிட பள்ளிக் கூடங்களுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புகிற பெற்றோர்களிடம்தான் கேட்க வேண்டும்.

அப்போதுதான், கல்விக் கட்டணம் குறித்த உண்மையான தகவல்கள் வெளிவரும்.

You might also like