என்னுடைய தோல்வி மட்டும் வருத்தத்திற்கு உரியதாகி விடாது!
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளின்படி போட்டியிட்ட பலர் வெற்றி பெற்றிருக்கலாம். சிலர் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். அப்படி வெற்றி பெறாமல், போனவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணத்தைப் போல அமைந்திருக்கிறது 1967-ல் நடந்த தேர்தலில், விருதுநகரில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தபிறகு, காமராஜர் பேசிய பேச்சு. அன்றைய பேச்சிலிருந்து காலத்தின் தேவை கருதி அதன் சிறு பகுதி கீழே. 1967 தமிழகத்தின் அரசியலையே மாற்றிப் போட்ட தேர்தல் […]
முதலமைச்சர் விஜய் முன்னிருக்கும் சவால்கள்!
மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறைக்கலாம்; சில நூறு மதுக் கடைகளை மூடச் செய்யலாம்.
மதுவுக்கு அடிமையானவர்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட நினைத்தால்கூட மாநிலத்தில் அரசு சார்பிலான தகுந்த மறுவாழ்வு மையங்கள் இல்லை.
எந்தச் சுமையும் என்னை வீழ்த்திவிடாது!
மனித குலத்திற்காக நாம் எந்தப் பணியில் மிக அதிகமாக உழைக்க முடியுமோ, அத்தகையதொரு வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டால், எந்தச் சுமைகளும் நம்மை வீழ்த்திவிட முடியாது; ஏனெனில் அவை அனைவரின் நன்மைக்காகவும் நாம் செய்யும் தியாகங்களாகும். அப்போது நாம் அனுபவிப்பது அற்பமான, வரையறுக்கப்பட்ட, சுயநலமான மகிழ்ச்சியாக இருக்காது; மாறாக, நமது மகிழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுடன் இணைந்திருக்கும். நமது மகிழ்ச்சி கோடான கோடி மக்களுக்கு சொந்தமானது. நமது சாதனைகள் நீடித்து நிற்கும், என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். உன்னதமான […]
எங்கிருந்து மக்களைப் பார்க்கிறோம்?
நச் திரை மொழி: “நீங்கள் மாளிகையில் இருந்து கொண்டு மக்களைப் பார்க்கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்.” – ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் – ரவீந்திரன் எழுதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குரல் கொடுத்த வசனத்தின் ஒரு பகுதி.
பண்டிதர் அயோத்திதாசர் யாருக்கானவர்?
நூல் அறிமுகம்: அயோத்திதாசர் யார்? அவரை எப்படிப் புரிந்துகொள்வது? அவர் யாருக்கானவர்? நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியவற்றை இன்றைய தேதியில் எப்படி உள்வாங்கிக் கொள்வது? அவர் கட்டமைக்கும் வரலாற்றிலிருந்து, அவர் முன்வைக்கும் பண்பாட்டிலிருந்து, அவர் கண்டடையும் தொன்மத்திலிருந்து நாம் எவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ள முடியும்? அயோத்திதாசரை ஒரு தலைசிறந்த சிந்தனையாளராகவும் செயலூக்கம் கொண்ட ஒரு செயற்பாட்டாளராகவும் பொதுவெளியில் அறிமுகம் செய்து வைத்தவர்களுள் முதன்மையானவர் டி.தருமராஜ். அயோத்திதாசரை நாம் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும் […]
முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்!
குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுக்காமல் த.வெ.கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.





