டெல்லி ஜந்தர் மந்தரும் தமிழ்நாட்டு மெரினாவும்!
கடந்த 10-ம் தேதி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலகக் கோரி, போராட்டத்திற்கென்று அனுமதிக்கப்பட்ட டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெரும் திரளாகப் பலரும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முனைந்தனர். அப்போது நடந்த கடுமையான ஒடுக்குமுறையை டெல்லி வாழ் மக்களும் ஊடகம் வழியாக இந்திய மக்களும் நன்கு அறிவார்கள். டெல்லியில் இத்தகைய போராட்டங்கள் நடப்பது இது முதல் முறை அல்ல. இதுவரை பல போராட்டங்கள் இதே ஜந்தர் மந்தர் பகுதியில் நடத்தப்பட்டிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு […]
டெல்லியை அதிர வைத்த நிகழ்வு!
கடந்த 10-ம் தேதி அன்று கரப்பான்பூச்சி இயக்கத்தினரும் காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளும் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஸ்குமாரை பதவி விலகக் கோரி பெரும் ஆர்ப்பாட்டத்திற்கான அறிவிப்பை செய்திருந்தன. அன்றைக்கு என்ன நடந்தது? இது குறித்து இந்திய வாக்குரிமை மீட்பு இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகர் கொடுத்த பேட்டியில் 10-ம் தேதி அன்று டெல்லியில் நடந்த நிகழ்வு குறித்து இப்படிச் சொல்கிறார். “இந்த கரப்பான்பூச்சி இயக்கம் தலைமைத் தேர்தல் ஆணையரை எதிர்த்து பெரும் போராட்டத்தை […]
தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த பிரகாஷ்ராஜ்!
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் மற்றும் கரப்பான் பூச்சி இயக்கத்தினர் பேரணியாகச் சென்று வெவ்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ்குமாரை திருடன் என்று சொல்லும் […]
தமிழகத்திலிருந்து தப்பியோடியவர்களை வரவழைப்பார்களா?
செய்தி : 2019 முதல் 2026-ம் ஆண்டு வரை, மோடி அரசு 36 நாடுகளிலிருந்து 288 குற்றவாளிகளை (வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியவர்கள்) வெற்றிகரமாக இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவந்துள்ளது. – உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல். கோவிந்த் கமெண்ட் : பாஜக அரசின் கண்காணிப்பின் கீழே வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய 288 குற்றவாளிகள் மறுபடியும் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். இனி அவர்கள் மீது தப்பி ஓடியதற்கும் சேர்த்து வழக்குத் தொடரப்படலாம். அதெல்லாம் இருக்கட்டும். அண்மைக் காலமாக தமிழகத்திலிருந்து வெவ்வேறு குற்றச்சாட்டுகளுக்கு […]
உச்சநீதிமன்றத்தின் ‘டூ இன் ஒன்’ யோசனை!
செய்தி : போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்டு செலுத்தப்படாத அபராதத் தொகையை மின்கட்டணத்துடன் இணைத்து வசூலிக்கலாம். – உச்சநீதிமன்றம் யோசனை கோவிந்த் கமெண்ட் : போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு உடனடியாகவும் அபராதம் விதிக்கப்படுகிறது. அப்படி அபராதம் கட்டத்தவறியவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் தரச் சான்றிதழ் பெறும்போது, செலுத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. இதுதான் தற்போதுள்ள நடைமுறை. இதை மின்சாரக் கட்டணத்தோடு இணைத்துக் கட்டச் சொன்னால், அதை கட்டுபவர்களுக்கே ஷாக்கடிக்க ஆரம்பித்துவிடும். ஏற்கனவே மின்சாரக் கட்டணம் கூடிக்கொண்டிருக்கையில் சராசரி மக்கள், எத்தகைய சுமைகளைத்தான் […]
யாருக்கானது இந்த பொருளாதார வளர்ச்சி?
செய்தி : 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கு சாத்தியமானதுதான். தற்போதைய வளர்ச்சி வேகத்தையும், ஸ்டார்ட்அப் புத்தாக்கத்தையும் இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்தால் இந்த வளர்ச்சியை எட்டிவிடலாம். – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவிந்த் கமெண்ட் : மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் சொல்கிறபடி 10 சதவீத அளவுக்கான வளர்ச்சி சாத்தியமானதுதான். உலகளவில் சில ஏகாதிபத்திய நாடுகளினால் உருவாகும் பொருளாதார சீரழிவு சராசரியான மனிதர்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் வேலைகளை […]












