மேதையாக இருக்கப் பணம் அவசியமில்லை!

‘ஒன் சிம்பிள் ஸ்டெப்’ என்ற நூலை எழுதியுள்ள ‘ஸ்டீபன் கீ’ புத்தகம் உங்கள் யோசனைகளுக்கு உரிமம் வழங்குவதற்கும் அவற்றை தங்கச் சுரங்கங்களாக மாற்றுவதற்கும் ஒரு விரிவான வழிகாட்டியாகும். ஒரு சிறந்த யோசனையை எவ்வாறு உருவாக்குவது, அதைப் பாதுகாப்பது, சாத்தியமான உரிமதாரர்களுக்கு அதை சந்தைப்படுத்துவது மற்றும் ராயல்டி ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவது எப்படி என்பதற்கான படிப்படியான வழிமுறைகளை அவர் வழங்குகிறார். அவர்களின் யோசனைகளுக்கு உரிமம் வழங்குவதன் மூலம் மில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதித்தவர்களின் நிஜ வாழ்க்கை வெற்றிக் கதைகளையும் […]

பிறந்ததற்காக ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுப் போ!

– விவேகானந்தரின் நம்பிக்கை மொழிகள் * மதத்திற்காகச் சச்சரவு செய்வது வெறும் பழத்தோலுக்காக சண்டையிடுவதற்கு ஒப்பானது. * சாத்திரத்தை எல்லாம் தூக்கிக் குப்பையிலே போடு. முதலில் நாட்டு மக்கள் உயிரோடு வாழக் கற்றுக் கொடு. பிறகு பாகவதம் படிக்கச் சொல். * ஒவ்வொரு வேலையும் புனிதம் தான். உலகத்தில் எந்த வேலையும் கீழானது என்று சொல்ல உனக்கு உரிமை இல்லை; துப்புரவுத் தொழிலாளியின் வேலைக்கும், அரியணையில் அமர்ந்து அரசாட்சி செய்யும் அரசனின் வேலைக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. […]

வாட்டர்கேனில் வித்தியாச இன்குபேட்டர்!

சக்சஸ் ஸ்டோரி: தொழிலில் ஜெயித்த எலக்ட்ரீசியன்! காரைக்குடியைச் சேர்ந்தவர் முத்துவேல். பதினைந்து ஆண்டுகளாக எலக்ட்ரிக்கல் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். தற்போது ஆட்டோ பார்ட்ஸ் தொழிலில் ஈடுபட்டுவரும் அவர், வித்தியாசமான முறையில் வாட்டர்கேனில் இன்குபேட்டர் செய்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். யூ டியூப் வாத்தியார்: நம்மிடம் பேசிய முத்துவேல், “யூ டியூப் பார்க்கும்போது இன்குபேட்டர் தயாரிப்பில் ஆர்வம் வந்தது. ஏற்பட்டது. நாமும் செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. எல்லோரையும்போல நானும் செய்துபார்த்தேன். திடீரென ஒரு யோசனை. எல்லோரையும் போல நாம் […]

வாழ்க்கைக்கான தத்துவத்தை மிக எளிதாக விளக்கிய விவேகானந்தர்!

அமெரிக்காவில் இருந்தபோது நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார் விவேகானந்தர். அப்போது அவருடைய சீடர்கள் பின்தொடர்ந்து வந்தனர். தூரத்தில் சிலர் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார் விவேகானந்தர். அப்போது ஹாலிஸ்டர் என்கிற சீடர் அந்த விளையாட்டைப் பற்றி விவேகானந்தருக்கு விளக்கினார். கொடிக்குக் கீழே இருக்கும் குழிக்குள் பந்தை செலுத்த வேண்டும் என்றால் குறைந்தது 4 முறையாவது முயற்சி செய்ய வேண்டும் என்றார் அவர். இதில் விவேகானந்தருக்கு உடன்பாடில்லை. ”நான் ஒரே முயற்சியில் பந்தை குழிக்குள் செலுத்துகிறேன்” என்றார். உடனே ஹாலிஸ்டர், ”நான் […]

தற்சார்பு வாழ்க்கைக்கு வழிகாட்டும் அழகேஸ்வரி!

சக்சஸ் ஸ்டோரி: தொடர் – 2 பாரம்பரிய விதைப் பாதுகாப்பு மற்றும் பரவலாக்கல், இயற்கை விவசாயம் மற்றும் மாடித் தோட்டங்களை உருவாக்க வழிகாட்டல், இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்வியலை மக்களிடம் கொண்டுசேர்த்தல், இயல்வாகை பதிப்பகம் என சதாபொழுதும் நம்மாழ்வாரின் வழியில் உற்சாக நடைபோடுகிறார் அழகேஸ்வரி. நம்மாழ்வார் காட்டிய பாதை திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு அருகிலுள்ள போத்தநாயக்கனூரைச் சேர்ந்த அவர், தற்போது ஊத்துக்குளியில் வசித்துவருகிறார். படிப்பு, வேலை எனப் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையின் திசைமாற்றம் பற்றி மனந்திறந்து பேசினார். […]

எண்ணங்கள் மகத்தான சக்தி கொண்டவை!

– எம்.எஸ்.உதயமூர்த்தி சரியான எண்ணங்களை வளர்த்துவிட்டால், சரியானபடி சிந்திக்கத் தொடங்கிவிட்டால் வாழ்வு மகிழ்வுடன் அமையும். வெற்றியால் நிறையும். சாதனைகளால் சிறக்கும். எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் ஆணிவேர். எண்ணம் வலிமைமிக்கது. எண்ணம் மகத்தான சக்தி கொண்டது. மகத்தான சாதனைகளைப் புரியவல்லது. முடியும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மனிதன் நாளடைவில் சாதனைகள் நிறைந்த பெரும் மனிதனாய் மலர்கின்றான். நல்ல எண்ணமும் அப்படித்தான். கெட்ட எண்ணங்களும் அப்படித்தான். எண்ணம் ஒரு தீப்பொறிபோல. ஒரு தீப்பொறி விழுந்ததும் முதலில் கனிகிறது. பின் புகைகிறது. […]