இன்னும் ஏன் இந்த சாதி சார்ந்த பாரபட்சம்?

ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சலூனில் கூட அனுமதி மறுப்பது இந்த நவீனயுகத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. தற்போதுவரை நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரியான நவீன தீண்டாமைக்கு நாம் வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிவப்புக் கடல்!

தாய்லாந்தில் உள்ள நோங் ஹான் கும்ப வாபி ஏரியை, ‘சிவப்பு கடல்’ என்று அழைக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை, 8 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி முழுவதும் செந்தாமரைகள் பூத்திருக்கின்றன. இந்த ஏரியில் பூத்திருக்கும் செந்தாமரைகளைக் காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள்வருகிறார்கள். செந்தாமரைகளைப் பார்ப்பதற்கு அதிகாலை ஏற்ற நேரம். பூக்கள் முழுவதுமாக    விரிந்திருக்கும். அதனால் பகல் முழுவதும் இந்த ஏரி பரபரப்பாகவே இருக்கிறது. சிறிய கட்டுமரம், படகுகளில் செந்தாமரைகளுக்கு […]

50 நாடுகளுக்குச் சென்ற 10 வயது சிறுமி!

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, இதுவரை 50 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார். அதேநேரத்தில், இதற்காக அவர் பள்ளிக்கு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. அந்த சிறுமி குறித்த ஒரு பதிவு இந்தியாவை பூர்விகமாக உடையவர் தீபக். இவரது மனைவி அவிலாஷா. இவர்கள் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில் தணிக்கையாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகள் அதிதிக்கு பத்து வயதாகிறது. தங்கள் மகளுக்கு பல்வேறு நாடுகள் பற்றிய […]

அரசைப் பலப்படுத்த குடிமகன்களை ஏன் பாடாய்ப் படுத்துகிறார்கள்?

ஊர் சுற்றிக்குறிப்புகள் : பார்க்கும் போது எவருக்குமே பதற்றம் கூடுகிறது. டாஸ்மாக் கடைக்கு முன்பு கூடுதலான விலைக்கு ஏன் விற்கிறீர்கள்? – என்று கேள்வி கேட்டதற்காக அந்தக் குடிமகனை காவலர் ஒருவர் சரமாரியாக கன்னத்திலேயே அடிக்கிறார். பக்கத்திலிருந்து மற்ற குடிமகன்கள் முணுமுணுக்கிறார்கள். புலம்புகிறார்கள். ஆதங்கப்படுகிறார்கள். இந்தக் காட்சி பல தொலைக்காட்சிகளில் வெளிவந்து பலரை அதிர வைத்திருக்கிறது. “குடி குடியைக் கெடுக்கும்” என்கிற எச்சரிக்கை வாசகங்களை நினைவுபடுத்தும் அரசு தான், இன்னொரு புறம் ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் விற்பனைக்கான […]

உணவகம் எனும் இரக்கமற்ற வசூல் மையங்கள்!

எழுத்தாளர் ராஜகுமாரனின் அனுபவம் அண்மையில் பயணத்தின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆரோக்கியமான உணவுக்காக அலைந்த அனுபவத்தை எழுதியுள்ளார் எழுத்தாளரும் இயக்குநருமான ராஜகுமாரன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டே இருக்கிறேன். இதில் குடும்பப் பயணம், தோழமைப் பயணம், எழுத்துப் பயணம், தனித்த பயணம், படப்பிடிப்புக்கான பயணம் எல்லாம் அடங்கும். பயணங்கள்தான் என் ஆழ்மனதை, எழுத்தை, படைப்பூக்க மனநிலையை உற்சாகமாக இயக்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் எண்ணிலடங்கா அனுபவங்கள். பாடங்கள். பயணங்களில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க […]

3 ஆண்டுகளில் பிரதமா் மோடியின் பயண செலவு!

பிரதமா் மோடி, கடந்த 2019-ல் இருந்து 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்காக சுமார் 23 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் வீ.முரளிதரன் எழுத்துபூா்வமாக பதிலளித்தார். அதில், “கடந்த 2019-இல் இருந்து பிரதமா் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் எண்ணிக்கை 21. இதில், ஜப்பானுக்கு 3 முறையும் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தலா 2 முறையும் சென்றார். அவரது வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.22.76 […]