இப்படியும் சில ‘நிறம் மாறாத பூக்கள்’!
ஊர் சுற்றிக் குறிப்புகள் : சென்னை புறநகர் பகுதியில் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரியான நண்பரை சமீபத்தில் சந்தித்தபோது, அவர் ஒரு சம்பவத்தை விவரித்தார். ஒருநாள் மாலை நேரத்தில், எங்களுடைய போலிஸ் ஸ்டேசனுக்கு ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் வந்திருந்தார்கள். அந்த இளைஞர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் பளிச் சென்ற நிறத்துடன் ஸ்லிம்மாக இருந்தார். அவருடன் வந்த அந்த இளம்பெண் சென்னையைச் சேர்ந்தவர். தனியார் அலுவலகத்தில் பணிபுரிகிறவர். இருவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வருவதாகவும், அந்தப் பெண்ணின் […]
கடலுக்கு அடியில் காதலின் அதிசயச் சின்னம்!
வெறும் 12 செ.மீ. நீளமுள்ள ஒரு மீன், ஒரு வார கால உழைப்பில் 2 மீட்டர் அகலமுள்ள ஒரு வடிவத்தை உருவாக்குகிறது. இது வெறும் கலை அல்ல இயற்கையின் படைப்புகள் வியக்கத்தக்கது என்பதற்கான சான்று.
மீண்டும் வலுக்கும் போர்: பாதிப்பை தாங்குவது யார்?
சில மாதங்களாக அமெரிக்காவுக்கும் ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்ச் சூழலால், உலகளாவிய அளவில் எவ்வளவு பாதிப்புகள்? பங்குச்சந்தை வர்த்தகம் சரிந்து பல நாடுகளில் பொருளாதாரமும் சரிந்து உருவான பொருளாதாரச் சிக்கலை, பல நாடுகளில் உள்ள சாமானிய மக்கள் சிரமத்துடன் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஏற்படும் சூழல் உருவாகி, பல நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சை விட்ட நிலையில், மறுபடியும் அமெரிக்க – ஈரான் இடையிலான ஒப்பந்தம் முறிந்து, […]
உண்மையைச் சொல்லும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்!
செய்தி: தவெகவில் இணைபவர்கள் எல்லோரும் தூய்மையானவர்கள் என சான்றளிக்க முடியாது! – தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கருத்து. கோவிந்த் கமெண்ட்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான மாணிக்கம் தாகூர் சொல்வது உண்மைதான். தவெகவில் பல்வேறு கட்சிகளிலிருந்து பல்வேறு நோக்கங்களுக்காக வந்து சேர்கிறவர்கள் அதிகரித்திருக்கிற நிலையில், அவர்கள் அனைவருக்கும் தரச் சான்றிதழ் அளித்திவிட முடியாது தான். ஆனால், தவெகவில் சேர்கிறவர்கள் சேர்ந்த பிறகு எதாவது குற்றச் செயல்களை செய்தாலோ, முறைகேட்டில் ஈடுபட்டாலோ அதன் பலன் தவெகவைத்தான் […]
திமுக-அதிமுக கூட்டணி என்பது வெறும் வதந்தியா?
செய்தி: திமுக – அதிமுக கூட்டணி என்பது ஆதவ் அர்ஜுனா பரப்பும் வதந்தி! – முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கருத்து. கோவிந்த் கமெண்ட்: தற்போது திமுக – அதிமுக கூட்டணி பற்றிய வதந்தியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரப்புவதாகச் சொல்லியிருக்கிறார் முன்னாள் அமைச்சரான சிவசங்கர். ஆனால், இத்தகைய கூட்டணி குறித்த வதந்தி தேர்தல் முடிந்த பிறகு உருவானதற்கு யார் காரணம்? அப்போதே அதை அதிமுக கூட்டணியிலும், திமுக கூட்டணியிலும் இருந்த கட்சித் தலைவர்களே சாட்சியம் சொல்லியிருக்கிறார்களே. […]
காவல் மரணங்கள் எப்போது முடிவுக்கு வரும்?
செய்தி: காவல் மரணங்களில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை! – சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் உறுதி. கோவிந்த் கமெண்ட்: காவல் மரணங்கள் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில், சாத்தான் குளம் சாட்சியாக இருப்பதைப் போலவே திமுக ஆட்சியில் மடப்புரம் சாட்சியாக இருந்திருக்கிறது. தற்போது, தவெக ஆட்சியிலும் அதே மாதிரி ஒரு கொடுமையான தாக்குதல் நடந்து உயிரிழப்பு வரை சென்றிருக்கிறது. ஆக, ஆட்சியாளர்கள் மாறியிருக்கிறார்கள். ஆனால், […]





