தமிழ் சினிமாவுக்கு திருப்புமுனை தந்த ‘நல்ல தம்பி’!
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் மாணவனாக இருந்த சமயம். அப்பொழுது அண்ணாவின் சொற்பொழிவுகளை கேட்டேன். திராவிட முன்னேற்றக் கழகம் கூடத் தோன்றியிராத காலம் அது. பொதுக்கூட்டங்களிலும் மாணவர் கூட்டங்களிலும் அண்ணாவின் பேச்சைக் கேட்க நேர்ந்த போதெல்லாம் இவர் நிச்சயம் ஒரு பெரிய தலைவராக வரப்போகிறார் என்று நான் கருதுவேன். அண்ணாவின் அரசியல் எழுச்சியையும் கலையுலக எழுச்சியையும் தள்ளி நின்று ரசித்த பல்லாயிரக்கணக்கான பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். அடுத்து ‘நல்லதம்பி’ படம் பார்த்தேன். […]
எண்ணத்தை மட்டுமே பிரதிபலிக்கும் சைகை மொழி!
செப்டம்பர் 23: சர்வதேச சைகை மொழி தினம் காது கேளாத வாய்பேச இயலாதவர்களுக்கென உலகம் முழுவதும் செப்டம்பர் 23-ம் தேதி சர்வதேச சைகை மொழி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மனிதன் தன் தேவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பயன்படுத்திய மொழி சைகை மொழி. சைகை மொழி என்பது பலவிதமான கை அசைவுகள் மற்றும் முக பாவனைகள் மூலம் பேசப்படுகிறது. உலகில் பல்வேறு மொழிகள் உள்ளதை போலவே சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை […]
பாரம்பரிய மருத்துவத்தை மீண்டும் கையிலெடுப்போம்!
அரசு மருத்துவ மையங்களில் ஆயுர்வேத சேவைகள், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி, காப்பீட்டு வசதி மற்றும் சர்வதேச அங்கீகாரம் என இந்தியாவின் ஆயுர்வேத முன்னேற்றங்கள் குறித்த ஓர் பார்வை. ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ம் தேதி அன்று ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர்-23 என்பது சர்வதேச அளவில் Autumnal Equinox-ஐ குறிக்கும். இலையுதிர் காலச் சம இரவு நாள் என அழைக்கப்படும் இந்நாள், பகலும் இரவும் சமமான கால அளவைக் கொண்டிருப்பதான சம இரவு நிகழ்வுடன் (Equinox) ஒத்துப்போகிறது. சமமான […]
நம்பிக்கையை ஊட்டி வளர்த்த தாய்!
வாசிப்பின் ருசி : குழம்பு வைக்க காசில்லாத நாட்களில் உண்ண முகம் சுழித்த என்னிடம் “நாமும் நல்லாயிருப்போம்டா” என்ற சொற்களை சோற்றில் ஊட்டி வளர்த்தாள் என் தாய்! – இயக்குநர் சீனு ராமசாமி
பாப்லோ நெருடா: சிலி நாட்டை சிலிர்க்க வைத்த மகாகவி!
காதல் கவிதைகளும், சமத்துவம் நிறைந்த உலகத்தையும் தன்னுடைய கவிதைகளில் வார்த்த பெருங்கவிஞர் பாப்லோ நெருடா (Pablo Neruda). சிலி நாட்டில் தோன்றிய நெருடா எழுதியது ஸ்பானிய மொழியில். அப்பா ரயில்வே ஊழியர் இளம் வயதிலேயே அவர் தவறிவிட குடும்பத்தை காப்பான் பையன் என்று எதிர்பார்த்தார்கள். இவர் பிரெஞ்சு படித்துவிட்டு ஆசிரியர் ஆகலாம் என்று முயன்றார். ஆனால், மிஸ்ட்ரலின் பழக்கம் அவரின் வாழ்க்கையை மாற்றிப்போட்டது. இவர் கவிதை எழுத வீட்டில் கடும் எதிர்ப்பு. செக் நாட்டைச் சேர்ந்த கவிஞரின் […]
கிளறக் கிளற வெளி வரும் முந்தைய வழக்குகள்!
எங்கள் ஆட்சியில் தப்பு செய்யவும் விடமாட்டோம், ஏற்கனவே தப்பு செய்தவர்களையும் விடமாட்டோம் என்று அண்மையில் பேசியிருந்தார் முதல்வர் விஜய். அவர் சொல்கிறபடியே திமுக தரப்பில் உள்ள பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றமும் தலையிட்டு சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்திய நிலையிலும் சம்பந்தப்பட்ட வழக்குகள் முன்னகராமல் அப்படியே நிற்கின்றன. இதற்கு, தமிழக ஆளுநர் அனுமதி அளிக்காததை காரணமாக சொல்கிறார்கள் தவெக அமைச்சர்கள். தமிழகத்தில் உள்ள திமுக அமைச்சர்கள் பலர் மீது வெளிப்படையான ஊழல் […]





