இந்தோ – சோவியத் நட்புறவு தழைக்கிறதா?
செய்தி : 80-வது ஆண்டில் இந்தியா – ரஷ்யா உறவு: இருதரப்பு பொருளாதாரத்தை ஒன்பது அரை லட்சம் கோடிக்கு உயர்த்த தீவிரம்! – இந்தியத் தூதர் தகவல். கோவிந்த் கமெண்ட்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பட்டும் படாமலுமான நட்புறவு ஒருபக்கம் இருக்கிறதென்றால், மறுபக்கம் இந்தோ – சோவியத் நட்பும் கடந்த 80 ஆண்டுகளைக் கடந்து இன்று வரை நீடித்திருப்பது சர்வதே அளவில் ஆரோக்கியமானதுதான்.
போதைப்பொருள் கடத்தல்: துப்புக் கொடுத்தால் ரூ.950 கோடி!
செய்தி: போதைப் பொருள் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.950 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு. கோவிந்த் கமெண்ட்: அமெரிக்காவில் போதைப் பொருள் பரவலாகப் புழக்கத்தில் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், போதை கடத்தல் தலைவனின் தலைக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 5 மடங்கு விலை கூடுதலாக தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், கடத்தப்படும் போதைப் பொருளின் மதிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பதை நீங்களே நிதானமாக கணக்குப்போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தாக்குதல்!
செய்தி: வளைகுடா நாடுகளின் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று ஈரானுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல் ரத்து! – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு! கோவிந்த் கமெண்ட்: வளைகுடா நாடுகளின் வற்புறுத்தலையடுத்து ஈரான் மீதான தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை ரத்து செய்திருக்கிறார் அமெரிக்க அதிபரான டிரம்ப். அதேசமயம், தான் பேசும் வார்த்தைகள் எத்தகைய அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் டிரம்ப் உணர்ந்தால் நல்லது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை நோக்கி…!
நவீன மயமாக்கலை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் சராசரி வாழ்க்கைத் தரத்தை உலகத்தரமாக மாற்றும் முயற்சியில் மத்திய கிழக்கு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. துபாயில், இயற்கைச் சூழலும் செயற்கையும் இணைந்து கைகோர்த்து செல்லுமாறு நாட்டின் உள் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் துபாயின் தொலைநோக்கு திட்டம் 2030 அனைவரும் வியக்கும் அளவு செயல் வடிவம் பெற்று வருகிறது. துபாய் தனது பொருளாதாரத்தை உயர்த்தவும் மேம்பட்ட வாழ்க்கை முறையை நடைமுறைப்படுத்துவதற்கும் கச்சா எண்ணெய் வருவாயை மட்டும் […]
டிரம்பின் இந்த வார்த்தையாவது பலனைத் தருமா?
ஐந்து மாதப் போருக்குப்பின் முதன் முறை ஈரானுடன் பேச்சுவார்த்தை நடக்கும் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு.
450 மில்லியன் ஆண்டுகளாக உயிர்வாழும் புதைப்படிவம்!
கடற்கரையின் அலை ஓரத்தில் நடந்து கொண்டிருக்கும்போது நண்டு போல தோற்றமளிக்கும் நீண்ட வால் கொண்ட ஒரு விசித்திரமான உயிரினம் மணலுக்குள் இருந்து மெதுவாக வெளியே வந்தால் எப்படி இருக்கும்?





