டிஜிட்டல் உலகில் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொள்வார்!

ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவர்களுக்கு ஆசையை தூண்டி விட வேண்டும் என்கிற ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட வசனத்தை நினைவூட்டும் வகையில் மோசடி பேர்வழிகள் உலகளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை வளர்ச்சியடைந்து வரும் இத்தருணத்தில் நம்மை ஏமாற்ற விதவிதமாக சிந்தித்து நமக்கு ஆசையை தூண்டி விடுகின்றனர். முன்பெல்லாம் அனாமேதய தொலைபேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகளில் நம்மை தொடர்பு கொள்ளும் வடமாநில ஆசாமிகள் குறிப்பிட்ட வங்கியின் பெயரைச் சொல்லி நான் மேனேஜர் பேசுகிறேன். உங்கள் ATM அட்டை […]

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்குப் பறந்த இந்தியர்கள்!

கடந்த 19-ம் தேதி போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்பவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கைதான இலியாஸ் அளித்த தகவலின் பேரில் ராயபுரத்தைச் சேர்ந்த முகமதுபுகாரி, தண்டையார் பேட்டையைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படும் கணினி, பிரிண்டர், பாஸ்போர்ட் அச்சடிக்கும் இயந்திரம், போலி ரப்பர் ஸ்டாம்ப், போலி விசா […]

221 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கம்!

– சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளில் அவதூறு தகவல்கள், சட்டவிரோத கருத்துகள், பதிவுகளை ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் கண்காணித்து அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் கடந்த 3-ம் தேதி வரையில் ‘பேஸ்புக்’, ‘இன்ஸ்ட்ராகிராம்’, ‘டுவிட்டர்’, ‘யூடியூப்’ போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து 40 சட்டவிரோத பதிவுகள், கருத்துகள் ஆகியவை ‘சைபர் கிரைம்’ காவல்துறை நடவடிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளது. அதோடு […]

ஒரே புகைப்படம்: 5000 சிம் கார்டுகள்!

தீவிர விசாரணையில் இறங்கிய சைபர் க்ரைம் தமிழ்நாட்டில் ஒரு நபரின் புகைப்படத்தை வைத்து பல சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சைபர் க்ரைம் போலீசாரின் விசாரணையில் சுமார் 5,000 செல்போன் எண்கள் இதேபோன்று பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. எத்தனை நபர்களின் அடையாளத்தை வைத்து தமிழ்நாட்டில் எவ்வளவு போலியான சிம் கார்டுகள் இயங்கி வருகின்றன என்பது குறித்து மாநில சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இதில் ஈடுபட்ட சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் மீது கைது […]

ஆணவக் கொலையாளிகளைத் தூக்கிலிடுங்கள்!

கணவரை இழந்த பெண் கண்ணீருடன் வேண்டுகோள் கிருஷ்ணகிரி அடுத்த புளுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கிட்டம்பட்டி அடுத்த வாத்தியார் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் ஜெகனை வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சட்ட சபையிலும் இந்த சம்பவம் […]

குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு உருவானது எப்படி!

எக்ஸ்நோரா நிர்மல் தமிழ்நாடு காவல்துறையில் குழந்தை கடத்தலைத் தடுக்க ஒரு பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டது எப்படி என்பது பற்றி ஒரு குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார் எக்ஸ்நோரா நிர்மல். “குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்களுக்கு இழைக்கப்படும் குரூரங்கள் பற்றி திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு பட காட்சி காட்டினேன். அதிர்ந்து போனார். பிறகு ஒரு பத்திரிகை சந்திப்பு. அதை தொடர்ந்து எக்ஸ்னோரா சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிலை திருடுபோனால் கண்டுபிடிக்க காவல்துறையில் ஒரு தனிப் பிரிவு உள்ளது. […]