நலம் காக்கும் நாவல் பழம்!
ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயம் இருக்கிறது. அதிலும் நாவல் பழத்தின் மருத்துவ குணம் மகத்தானவை. நாவல் பழம் மட்டுமல்ல… நாவல் மரத்தின் இலை, பட்டை, வேர் வரை அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. முன்னோர் காலத்தில் கிராமங்களில் சுலபமாக கிடைக்கும் நாவல் பழம். கோடைக் காலங்களில் நமக்கு கிடைக்கும் மிக முக்கிய பழங்களில் இவையும் ஒன்று. இன்று மருத்துவர்களே பாராட்டும் ஒரு சிறந்த பழமாக நாவல் பழம் விளங்குகிறது. சர்க்கரை வியாதி முதல் இதயப் பிரச்சனை […]
பெண்ணின் ஊதியம் யாருக்குச் சொந்தம்?
நீ பெண், உனக்குப் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அறிவோ, ஆற்றலோ இல்லை என்கிற ஆதிக்க மனப்பாங்கின் வெளிப்பாடு பெண்ணின் பொருளாதாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி ஆணை நகர்த்துகிறது. பொருளாதாரத்தைப் பெண்ணே கைக்கொண்டால் தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்த முடியாமல் போய்விடுமோ என்கிற ஆணின் அச்சமும் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. உயர் பதவி வகிக்கும் பெண் ஒருவர், தன் சம்பளம் முழுவதையும் கணவரே நிர்வகிப்பதாகவும் மாதம் ஆயிரம் ரூபாய் தன் செலவுக்கு என்று கொடுத்து விடுவதாகவும் கூறினார். ‘இதற்கு மேல் எனக்கு […]
கணையம் காப்போம்; ஆரோக்கியமாக வாழ்வோம்!
ஆரோக்கியம் அறிவோம் : மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு, நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியமே அடிப்படையாக அமைகிறது. நவீன உலகில், மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் உண்டாகின்றன. இதில் வயிற்று உபாதைகள் முன் எப்போதும் இல்லாத வகையில் பெருகி வருகிறது. இதற்கு முக்கிய காரணியாக இருக்கும் கணையம் பற்றியும் அதன் பாதுகாப்பு குறித்தும் அறிதல் அவசியமாகிறது. மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றான கணையம் இரண்டு முக்கியப் பணிகளை […]
குப்பை மறு சுழற்சியால் கோடீஸ்வரராக முடியும்!
உழைப்பும் திட்டமிடலும் இருந்தால் குப்பையும் கோபுரத்தில் அமர்த்தும் என்பதற்கு உதாரணமாய் திகழ்கிறார் சுஜாதா.
முட்டை என்னும் சத்துக்களின் பெட்டகம்!
ஜூன் 3: தேசிய முட்டை தின சிறப்புப் பகிர்வு உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிட எடுத்துக்கொள்ளும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ம் தேதி தேசிய முட்டை தினமாகக் கொண்டாடப்படுகிறது. தினசரி உணவில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இருப்பது அவசியமாகும். அதுவும் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விலை மலிவாகக் கிடைக்கக்கூடிய முட்டையின் முக்கியத்துவத்தையும், அது வழங்கும் அபாரமான ஆரோக்கிய நன்மைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்துவதே இந்த நாளின் முக்கிய […]
ஆரோக்கியம் அறிவோம்!
இயற்கை ஒவ்வொரு மனிதனையும் வெவ்வேறு மரபணு மூலக்கூறுகளுடன் தான் படைத்திருக்கிறது. நோய்களை எதிர்கொள்ளும் விதம், அதன் தடுப்பு முறைகள், மருத்துவம், உடற்கூறுகள் என அனைத்தும் வித்தியாசப்படுகிறது. உதாரணமாக ஒரே மாதிரியான உடல் உபாதைகள் தரக்கூடிய வலியின் வெளிப்பாடுகள் வெவ்வேறு வகையாக இருக்கும். பரவலாக காணப்படும் ஆரோக்கியப் பிரச்சினைகள் குறித்தும் அவற்றிற்கான உணவு முறைகள் பற்றியும் பார்ப்போம். ரத்த சோகை: தற்போது பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக இது அறியப்படுகிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். […]





