டைமண்ட் லீக் சாம்பியனானார் நீரஜ் சோப்ரா!

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக் மீட் தொடரின் இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் 88.44 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் டைமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

முன்னதாக காயம் காரணமாக காமன்வெல்த் தொடரில் நீரஜ் சோப்ரா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like