செய்தி:
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை; சட்டம் ஒழுங்கில் சுதந்திரமாக செயல்படுங்கள்!
– ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் விஜய் அறிவுறுத்தல்.
கோவிந்த் கமெண்ட்:
தேர்தலுக்கு முன்பு எந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சனை தீவிரமாகப் பேசப்பட்டதோ, அதே பிரச்சனை முதல்வர் விஜய் பதவிக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளேயே எழுப்பப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை சட்டசபையிலும், பொதுவெளியிலும் முன்வைத்து வரும் நிலையில், அதிகாரிகளுக்கான கூட்டத்தில் முதல்வர் விஜய் வெளிப்படையாக இப்படி வலியுறுத்தியிருப்பது ஆரோக்கியமான ஒன்று.