போதைக்கு எதிராக திமுக திடீர் போராட்டம்!

செய்தி:   

அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னையில் தடையை மீறி திமுக மறியல் போராட்டம்.

– முன்னாள் அமைச்சர்கள் உட்பட 700 பேர் கைது.

கோவிந்த் கமெண்ட்: 

தவெக அமைச்சரான சரத்குமார் ரீல்ஸில் போட்டபடி, தான் போதை மருந்தை உபயோகிக்கவில்லை என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

இந்தநிலையில், போதையே இருக்கக் கூடாது என்கின்ற விழிப்பான நோக்கில் சேகர் பாபு, மேயர் பிரியா தலைமையில் சென்னையில் நடுரோட்டில் அமர்ந்து போராடி இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து கைதாகி விடுவிக்கவும் பட்டிருக்கிறார்கள்.

ஆனால், இதே திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, இதே விதமான போதை எதிர்ப்பு விழிப்புணர்வை அவர்களே கடைபிடித்து டாஸ்மாக் ஒழிப்பில் முதல் கையெழுத்திட்டு, போதைப் பரவலைக் கட்டுப்படுத்தி எவ்வளவோ காரியங்களை செய்திருக்கலாமே?

இந்த விழிப்பெல்லாம் ஆட்சி பறிகொடுத்த பிறகுதான் வருமா என்ன?

You might also like