நீட் பிரச்சனை; போராடும் மாணவர்கள்!

செய்தி:

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது.

– போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

கோவிந்த் கமெண்ட்:

நீட் தேர்வை வம்படியாக கொண்டுவந்து அதை கண்டிப்புடன் செயல்படுத்தி இந்தியா முழுக்க லட்சக்கணக்கான மாணவர்களை தேர்வெழுத வைத்திருக்கிறவர்கள், தங்கள் தரப்பில் வினாத்தாள் கசிவதை ஏன் தடுக்க முனையவில்லை?

ஏற்கனவே நீட் தேர்வு என்பதே ஓர் ஃபில்டர்தான். அந்த ஃபில்டரிலும் ஏன் இவ்வளவு ஓட்டைகள்.

அந்த விதத்தில், தமிழக முதல்வரான விஜய்யும் நீட் தேர்வை தற்காலிகமாக அல்ல முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருப்பது கவனிக்கத்தக்க ஒன்றுதான்.

You might also like