செய்தி:
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை: டாஸ்மாக் நிர்வாகம் கடும் எச்சரிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியின்போதும், மதுபானக்கடைகளைப் படிப்படியாகக் குறைப்பது என்கிற முடிவெடுத்து, சாலையோரத்திலிருந்த சில மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
அதற்கு முன்பு நடந்த தேர்தல் வாக்குறுதியில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று, “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கைக் கொண்டு வருவோம்“.
தற்போது தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிற விஜய் தனது தேர்தல் பரப்புரையின்போது, மதுவிலக்குப் பற்றி குறிப்பிடாவிட்டாலும் கூட தமிழகம் முழுக்க கோவில்கள், பள்ளிகளுக்கு அருகிலுள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.
அதோடு, 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு டாஸ்மாக் கடைகளில் மதுவை விற்பனை செய்யக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார் அமைச்சரான ஆதவ் அர்ஜுனா.
தமிழகத்தில் ஏற்கனவே பொருளாதார நிதி நெருக்கடி இருந்தாலும், டாஸ்மாக் விஷயத்தில் எடுக்கப்பட்டிருக்கிற இந்த முடிவு பரவலான பாராட்டைப் பெற்று தந்திருக்கிறது என்பதே உண்மை.