அதிமுக தொண்டர்கள் யாரை நம்புவார்கள்?

செய்தி:

எடப்பாடி பழனிசாமி நீக்கியது எதுவும் செல்லாது; நீக்கப்பட்டவர்கள் எல்லோரும் அவரவர் பதவியில் தொடர்வார்கள்!

– முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 

கோவிந்த் கமெண்ட்:

அதிமுகவுக்குள் இதற்கு முன்பும் சில பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றன. கட்சியே இரு அணிகளாக பிரிந்து, இரட்டை இலை சின்னத்தை இழந்த நிலையில், போட்டியிட்டு தோற்றதெல்லாம் முன்பு நடந்திருக்கிறது.

பிறகு ஜானகி அம்மாவின் அளப்பரிய முயற்சியில், அதிமுக ஒன்றிணைந்து இரட்டை இலைச் சின்னம் கிடைத்து, மறுபடியும் வெற்றிவாகை சூடிய வரலாற்றை எல்லாம் தற்போது, பல்வேறு பிரச்சனைகளுக்காக அதிமுகவுக்குள் சண்டையிடுகிறவர்கள் உணர்ந்திருக்கிறார்களா?

இப்படியே போனால், அதிமுக தொண்டர்கள் யாரைத்தான் நம்புவார்கள்.

You might also like