ஒரு மரத்தின் உடைந்த கிளையைப் பார்த்தால் அது வெறும் மரக்கிளை என்று நினைப்போம்.
ஆனால், அது திடீரென்று கண்களைத் திறந்தால்? அது, கிரேட் பொட்டூ (Great Potoo) என்ற வித்தியாசமான இரவுப் பறவையாக இருக்கலாம்.
மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் வெப்பமண்டலக் காடுகளில் வாழும் கிரேட் பொட்டூ, பொட்டூ குடும்பத்திலேயே மிகப்பெரிய இனம். இது சுமார் 60 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது.
பார்ப்பதற்கு ஆந்தையைப் போல இருந்தாலும், இது ஆந்தை கிடையாது. Nightjars போன்ற இரவுநேரப் பறவைகளுடன் நெருங்கிய தொடர்புடையது.
இந்தப் பறவையின் மிகப்பெரிய சிறப்பு அதன் கண்ணுக்குப் புலப்படாத (camouflage). பகல் நேரத்தில் மரக்கிளை அல்லது உடைந்த மரத்தண்டு மீது உடலை நேராக வைத்துக்கொண்டு, தலையை மேல்நோக்கி நீட்டி அசையாமல் நிற்கும்.
அதன் சாம்பல், பழுப்பு நிற இறகுகள் மரப்பட்டையைப் போல இருப்பதால், அருகில் இருந்தாலும் அதை கண்டுபிடிப்பது கடினம்.
இவை கண்களை மூடியிருந்தாலும் சுற்றுப் புறத்தை கவனிக்க முடியும். அதன் இமைகளில் இருக்கும் சிறிய slit-கள் வழியாக வெளிச்சத்தையும் அசைவையும் உணர முடியும்.
இதனால் கண்களைத் திறந்து தனது ஆபத்தை கவனிக்கிறது. சூரியன் மறைந்ததும் இதன் இரை தேடும் பயணம் தொடங்குகிறது.
உயரமான கிளையில் அமைதியாகக் காத்திருந்து, அருகில் பறக்கும் இரையைப் பார்த்தவுடன் வேகமாகப் பறந்து சென்று பிடிக்கிறது.
பெரிய வண்டுகள், moths, grasshoppers போன்ற பூச்சிகள் இதன் முக்கிய உணவு. சில நேரங்களில் வௌவால்கள் மற்றும் சிறிய பறவைகளையும் பிடிக்கும்.
கிரேட் பொட்டூ-வின் இன்னொரு அடையாளம் அதன் விசித்திரமான குரல். இரவில் அது எழுப்பும் ஆழமான, moaning growl போன்ற குரல் காட்டுக்குள் எதிரொலிக்கும்.
இதனால் சில தென் அமெரிக்க நாட்டுப்புறக் கதைகளில், அந்தக் குரல் தொலைந்த குழந்தைகள் அல்லது பிரிந்தவர்கள் அழைப்பது போல கற்பனை செய்யப்பட்டது.
ஆனால், அவை folklore நம்பிக்கைகள் மட்டுமே; உண்மையில் இந்தக் குரல் தொடர்பு கொள்ளவும், தனது territory-ஐ பாதுகாக்கவும் பயன்படுகிறது.
இவை இனப்பெருக்கத்திற்காக கூடு கட்டுவதில்லை. மரக்கிளையில் இருக்கும் இயற்கையான சிறிய பள்ளத்தில் பொதுவாக ஒரே ஒரு முட்டையை இடும்.
பெற்றோர் இருவரும் முட்டையைப் பாதுகாத்து குஞ்சை வளர்க்கிறார்கள். குஞ்சு வளரும்போதும், பெரிய பறவையைப் போலவே மரக்கிளை போல அசையாமல் நிற்கும்.
இந்தப் பறவையின் குடும்ப வரலாறும் மிகவும் பழமையானது. இன்றைய கிரேட் பொட்டூவின் நேரடி முன்னோர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், பொட்டூ குடும்பத்துடன் தொடர்புடைய பழைய பறவைகளான Paraprefica-வின் fossil-கள் ஐரோப்பாவில் Eocene காலத்திலேயே கிடைத்துள்ளன.
அந்தக் காலம் சுமார் 56 முதல் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என குறிப்பிடப்படுகிறது.
1789-ல் ஜெர்மன் இயற்கை ஆராய்ச்சியாளர் ஜான் ஃபிரெட்டரிக் கிம்ளின் (Johann Friedrich Gmelin) கிரேட் பொட்டூ-வை முதன்முதலில் அறிவியல் ரீதியாக விவரித்தார். இன்று இதன் அறிவியல் பெயர் நைக்டிபிஸ் கிராண்டிஸ் (Nyctibius grandis).
தற்போது உலகளவில் உடனடி அழிவு அபாயத்தில் உள்ள இனமாக இது கருதப்படவில்லை.
இருந்தாலும், காடுகளை இழப்பது போன்ற habitat மாற்றங்கள் இதுபோன்ற காட்டு உயிரினங்களுக்கு நீண்ட காலத்தில் அச்சுறுத்தலாக இருக்கலாம்.
பகலில் மரக்கிளையாக மறைந்து, இரவில் இரையை வேட்டையாடி, கண்களை மூடியபடியே சுற்றுப்புறத்தை கவனித்து, காட்டின் இருளில் மர்மமான குரலை எழுப்பும் கிரேட் பொட்டூ இயற்கை உருவாக்கிய வித்தியாசமான camouflage-ன் ஒரு அற்புதமான உதாரணம்.
– சங்கீதா