செய்தி:
என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் வளர்ச்சி, கல்வித் திட்டங்கள் நிறுத்தப்படும்!
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே, டெல்லியில் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்றத்தால் ஆதாரம் இல்லை என்று விடுவிக்கப்பட்ட டெல்லியின் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாட்டில் தான் ஆதரித்துப் பேச வந்த கட்சி ஆட்சிக்கு வந்தால், எதைச் செய்யும் என்பதைப் பற்றி பேசலாம்.
எதிர்க்கட்சியான என்டிஏ கூட்டணி என்ன செய்யும் என்பதைப் பற்றியெல்லாம் யூகமாகப் பேசுவது பொருத்தமாக இருக்கிறதா?