செய்தி:
23-ம் தேதி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்; தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு!
- அரசியல் தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரம்.
கோவிந்த் கமெண்ட்:
கடந்த 3 வாரங்களாக தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் காது கொள்ளா முடியாத அளவிற்கு அளவுகடந்த ‘டெசிபல்’ அளவிற்கான சத்தத்தை சகித்துக் கொண்டிருந்த காதுகளுக்கு அப்பாடா என்று விடுதலை கிடைத்திருக்கிறது.
அதிகபட்சமாக சத்தம் அதிகமாகி காது அடைக்கிற மாதிரி உணர்வு ஏற்பட்டவர்களுக்கும் தற்போது, கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும்.