செய்தி:
அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடைகளில் குவிந்த மக்கள்.
கோவிந்த் கமெண்ட்:
மேற்காசியப் போர் வருவதற்கு முன்பே கிடுகிடுவென உயர்ந்துகொண்டே போன ஆபரணத் தங்கத்தின் விலை, மத்திய தர வர்க்கத்தினரையும் அடித்தட்டு மக்களையும் ரொம்பவே கவலைப் படுத்தியது.
போர் மூண்ட பிறகு, சற்றே விலை ஏறி, தணிந்து வரும் நிலையில், மார்க்கெட்டிங் யுக்திக்காக உருவாக்கப்பட்டிருக்கிற நாளான அட்சய திருதியையொட்டி வெவ்வேறு பிரம்மாண்ட நகைக்கடைகளில் கூட்டம் கூடியிருக்கலாம்.
ஆனால், சிறு நகைக் கடைகளில் வழக்கமாகக் கூடும் கூட்டம் கூடவில்லை என்பதுதான் எதார்த்தம்.