செய்தி:
“கலவரக் கும்பலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது நம் அனைவரது கடமை”.
மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அஸ்ஸாம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
கோவிந்த் கமெண்ட்:
தங்களது மதப் பண்டிகையை ஆரவாரமாகக் கொண்டாடுகிறவர்கள், சிறுபான்மை மதத்தினர் மகிழ்வாக கொண்டாடும்போது, அதில் நுழைந்து ஏன் சீர்குலைவை ஏற்படுத்துகிறார்கள்?
தங்களுடைய மத நம்பிக்கையைப் போலவே மற்றவருடைய மத நம்பிக்கையையும் குறைந்தபட்சமாவது நேசிக்க வேண்டாமா?