கழிவு மேலாண்மையில் புரட்சியை ஏற்படுத்திய இந்திரஜித் சிங்!

சுகாதாரம் என்பது நம் உடல் மற்றும் மன நலனைப் பேணிக்காக்கும் தூய்மையான பழக்க வழக்கங்களை உள்ளடக்கியது.

மக்களின் சுகாதாரம் அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் வழி வகுக்கும். இதற்காகவே, ‘தூய்மை இந்தியா இயக்கம்’ போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் நோக்கமே, திறந்து வெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பது, திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது ஆகியவை ஆகும். இ

ருப்பினும் இத்திட்டங்கள் பெரிய அளவில் மக்களிடையே மாற்றங்களைக் கொண்டு வரவில்லை என்பதை நமது சுற்றுப்புறமே உணர்த்துகிறது.

இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் சுகாதாரம், தூய்மை மற்றும் அதன் நிலையை மதிப்பிடுவதற்காக இந்திய அரசால் நடத்தப்படும் ஒரு வருடாந்திர ஆய்வே, ‘swach survekshan’ அல்லது தூய்மை கணக்கெடுப்பு.

நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இரண்டிற்கும் தனித்தனியாக ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இதில் பங்கு பெறும் நகரங்கள், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப்படுகிறது.

கடந்த 2024-25-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, அகமதாபாத், போபால் மற்றும் லக்னோ ஆகிய நகரங்கள், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

சிறந்த தூய்மையைத் தொடர்ந்து பேணும் நகரங்களின் தரவரிசையில் இந்தோர், சூரத், நவிமும்பை மற்றும் விஜயவாடா ஆகியவை இடம்பெறுகின்றன.

கடந்த ஆண்டு ஆய்வின்படி, 44-வது இடத்தில் இருந்த லக்னோ, இந்த ஆண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த அபரிமிதமான வளர்ச்சியின் பின்னே இருப்பவர் தான், ஐஏஎஸ் அதிகாரி இந்திரஜித் சிங்.

லக்னோவின் கழிவு மேலாண்மையில் பெரும் பணியாற்றிய இவர், அதை இந்தியாவின் தூய்மையான நகரமாகவும் உயர்த்தினார்.

2022-ம் ஆண்டு இவர் ஆணையராகப் பொறுப்பேற்ற போது, நவாப்களின் நகரமான லக்னோ, அதன் பாரம்பரியத்தில் முக்கிய ஒன்றான தூய்மையை இழந்திருந்தது.

நகரின் முக்கிய கிடங்குகளான Ghaila மற்றும் Shivri ஆகியவை குப்பைகளாலும் துர்நாற்றத்தாலும் நிரம்பி இருந்தன.

இதனை சரிசெய்ய பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார் இந்திரஜித் சிங்.

Ghaila-வில், சுமார் 8 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள், நவீன முறையில் கையாளப்பட்டு அகற்றப்பட்டன. அதோடு, அந்த இடங்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமைக் குடிலாக மாற்றப்பட்டன.

Shivri-யில், 10.5 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் கையாளப்பட்டு, அவை எரிபொருளாகவும் மாற்றி அமைக்கப்பட்டன.

வீடு தோறும் சென்று குப்பைகளை சேகரிக்க, 1200க்கும் மேற்பட்ட மின்சாரத்தால் இயங்கும் வண்டிகள் தினந்தோறும் அனுப்பப்பட்டன.

குப்பைகளைப் பிரித்தெடுக்கும் பணி தொடக்க நிலையிலேயே செயல்படுத்தப்பட்டதால் வெறும் 5 சதவீத குப்பைகளே, நிலப்பரப்பை சென்றடைந்தன.

சுகாதாரப் பணியாளர்களுக்கு ‘PPE kit’ எனப்படும், உடல் நலனைக் காக்க உதவும் உடைகள் மற்றும் சாதனங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

நீர் வடிகால்களை சுத்தம் செய்ய, JCB இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

நவீன தொழில்நுட்பங்களை கையாள்வதற்கு, அதிகாரிகளுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இரவு நேரங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், குறித்த நேரத்தில் அவர்களின் வங்கிக் கணக்கில், ஊதியம் சென்றடைவதும் உறுதி செய்யப்பட்டது.

சமூக நிகழ்ச்சிகள், தெருக்கூத்து, பள்ளி முகாம்கள் ஆகியவற்றின் மூலம் பெருமளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குப்பைகளை கையாளும் பணி, 48 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக வெறும் இரண்டு வருடத்தில் உயர்ந்தது.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக அமைந்தது, ‘UP Dashan பூங்கா’.

முழுக்க முழுக்க மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுகளால் உருவாக்கப்பட்ட பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது. குப்பைக் கூளங்கள் எல்லாம் பசுமைக் குடிலாக உருமாறின.

இவ்வாறு கழிவு மேலாண்மையில் புரட்சியை ஏற்படுத்திய இந்திரஜித் சிங், நாட்டின் மற்ற நகரங்களுக்கு முன்மாதிரியாக லக்னோவை உயர்த்தியவர் என்ற பெருமைக்குரியவராகவும் திகழ்கிறார்.

  • வாணி. எஸ்
You might also like