மழலைக் குரலில் எம்.ஜி.ஆரை மகிழ்வித்த ஷாலினி!

அருமை நிழல்:
 
நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கை திருமணத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் திருமதி. ஜானகி அம்மையாரும் கலந்து கொண்டார்.
 

இந்தத் திருமண நிகழ்வில் முன்னணி சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த ஷாலினியும் இந்தத் திருமணத்தில் பங்கேற்றார். 
 
அப்போது, தன் கையில் இருந்த சந்தன மாலையை எம்.ஜி.ஆருக்கு ஷாலினி அணிவிக்க, உடனே எம்.ஜி.ஆர், ஷாலினியை அள்ளிக் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார்.
 
அப்போது அவரிடம் “உங்க பேர் என்ன?” என்று ஷாலினி கேட்டவுடன், அவரோ சிரித்துக் கொண்டே “எம்.ஜி.ஆர்” என்று கூறியுள்ளார்
 
உடனே ஷாலினி, “அதுதான் தெரியுமே. அப்படின்னா என்ன அர்த்தம்?” என்று மறுபடியும் கேட்டுள்ளார்.
 
எம்.ஜி.ஆர் பலமாகச் சிரித்துக் கொண்டு “எம்.ஜி.ராமச்சந்திரன்” என்று அழுத்தமாச் சொன்னார்.
 
அப்ப ஏன் எல்லோரும் உங்களை “எம்.ஜி.ஆர்”னு சொல்றாங்கன்னு திரும்பவும் கேட்க, மறுபடியும் பலமாகச் சிரித்தாராம் எம்.ஜி.ஆர்.
 
– நன்றி: பிரசாந்த் குமார் முகநூல் பதிவு

 

#mgr #shalini #janakimgr #krvijaya #ஷாலினி #கேஆர்விஜயா #மக்கள்திலகம் #எம்ஜிஆர் #ஜானகிஎம்ஜிஆர்

 
You might also like