கரூரில், தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரிக்கட்டும் என, உச்சநீதிமன்றம் நேற்று (13.10.2025) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதோடு, இந்த சி.பி.ஐ. விசாரணையை கண்காணிக்க, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

இந்தக் கண்காணிப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஏற்கனவே தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழர்களுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ள கரூர் உயிரிழப்பு வழக்கு, தற்போது நீதிபதி அஜய் ரஸ்தோகி கைக்குச் சென்றிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக மாறியிருக்கிறது.