எனக்குப் பிடித்த படைப்பாளிகள்!

கவிஞர் சிற்பி

கேள்வி:
 
இப்போதும் சிறப்பாக எழுதும் படைப்பாளிகள் என்றால் யாரைக் குறிப்பிடுவீர்கள்?
 
கவிஞர் சிற்பி பதில்:
 
அள்ளிக் கொள்ள, அரவணைத்துக் கொள்ள எத்தனை வகை வகையான எழுத்துக்கள். மூத்தவர்களை விட்டுவிட்டுச் சில இளையவர்கள் அல்லது அதிகம் அறிமுகம் பெறாதவர்களைச் சொல்லுகிறேன்.
 
சாதாரண சொற்களில் அசாதாரண உணர்வை மீட்டிய நா.முத்துக்குமார், சங்கச் செவ்வியுடன் காதலைச் சொல்லும் பழநிபாரதி, அதிஸ்யா என்ற குழந்தைக் குதூகலத்தோடு வலம் வரும் அம்சப் ப்ரியா, மனிதத்தின் துளிகளை அடையாளம் காணும் ஜே.மஞ்சுளா தேவி, அரூப வாசனைக்காரரான இரா.பூபாலன்.
 
இன்று இல்லையென்றாலும் என்னோடு எப்போதும் இருப்பவர்கள் ஜெயகாந்தனும், ரகுமானும், மீராவும், கங்கை கொண்டானும்.
 
வாழ்பவர்களில் புவியரசு, எஸ்.ரா., ஜெயமோகன், இந்திரன் ஆகியோரின் பணி மறக்க முடியாதது.
 
நன்றி: தினமணி
You might also like