அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் ஓ.பி.எஸ்!

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக அலுவலகம் சென்று வந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார்.

எனவே, ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகம் செல்லும்போது உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் துறையினரிடம் மனு அளித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் பாதுகாப்புக் கோரி மனு அளித்துள்ளார்.

இந்த மனுவில், “அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செல்லும்போது அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் கூடும் வாய்ப்புள்ளது.

ஏராளமான தொண்டர்கள் அதிமுக அலுவலகத்தில் கூடுவதை பயன்படுத்தி கலவரம் செய்ய சமூக விரோதிகள் திட்டம்” என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like