தவெக கூட்டணியில் தான் நீடிப்போம்!

காதர் மொகிதீன்

செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டதும், செமையான கொந்தளிப்பு ஏற்பட்டது காதர் மொகிதீனிடமிருந்து.

கேள்வி இதுதான், “இஸ்லாமியர்களின் 5 கடமைகளுக்கு மேலாக 6-வது கடமையாக திமுக நாம் வாக்களிக்க வேண்டும்” என்று முன்பு ஒரு கூட்டத்தில் சொல்லியிருந்தீர்களே?”

இதற்குத்தான் கொந்தளித்த பதில்.

“பொய் சொல்லாதீங்க, பொய்யைக் கேள்வியாய் கேட்காதீங்க. அப்போது நாங்கள் இருந்த கூட்டணிக்கு வாக்களிக்கச் சொன்னேனே ஒழிய, திமுக கூட்டணிக்கு என்றெல்லாம் நான் சொல்லவில்லை” என்று சொன்னவர், சற்றுக் குரலை தாழ்த்திய நிலையில் இப்படிச் சொன்னார்.

“தற்போதைய நிலையில் நாங்கள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் ஊழலற்ற நல்லாட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.

இனி வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தவெக கூட்டணியில் தான் நாங்கள் இருப்போம்” என்று அதிரடியாகப் பேசி முடித்தார் காதர் மொகிதீன்.

You might also like