மினியேச்சர் புத்தகம் உருவாக்கி கேரளப்பெண் சாதனை!

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளிபுரத்தைச் சேர்ந்தவர் நாஜியா ஜெய்ன். எம்பிஏ பட்டதாரி. மினியேச்சர் புத்தகத்தை உருவாக்கி இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்சில் இடம்பெற்றிருக்கிறார்.

மினியேச்சர் புத்தகம் வெறும் 1 செ.மீ. உயரமும் அகலமும் கொண்டது. கைவினைப் பொருட்கள் மீதான காதல்தான் நாஜியாவை பதிவு செய்யத் தூண்டியது.

“நான் வியாபாரத்திற்காக கையால் செய்யப்பட்ட பரிசுகள் மற்றும் ஸ்கிராப் புத்தகங்களை உருவாக்குகிறேன். ஒரு சாதனையைச் செய்யவேண்டும் என்பது எனது கனவாக இருந்தது.

மினியேச்சர் புத்தகங்களை யாரும் உருவாக்க முயற்சிக்கவில்லை என்பதைக் கண்டறிந்தேன்.

எனவே அதை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட விரும்பினேன். இதுவொரு சாதாரண சிறிய நோட்புக்” என்று நாஜியா உற்சாகமாகப் பகிர்ந்துகொள்கிறார்.

எதிர்காலத்தில் தனித்துவமான யோசனைகளுடன் இதுபோன்ற சாதனைகளைச் செய்யும் ஆர்வம் குறையாமல் இருக்கிறார் நாஜியா ஜெய்ன்.

பா. மகிழ்மதி

You might also like