செய்தி:
டீசல் விலை ஏற்றத்தால் வாகன வாடகை அதிகரிப்பு; காய்கறி, மளிகை, எண்ணெய்ப் பொருட்கள் விலை உயர்வு!
– பொதுமக்கள் அதிர்ச்சி
கோவிந்த் கமெண்ட்:
மேற்காசியப் போர் துவங்கியதிலிருந்தே அமெரிக்கா அதிபரான ட்ரம்பும் சண்டை போடுகிறார். பதிலுக்கு ஈரானும் தன்னுடைய எதிர்வினையைக் காட்டுகிறது.
இந்த சண்டையால் உலகளவில் பல்வேறு நாடுகளிலுள்ள மக்கள் பாதிப்புக்குள்ளாக வேண்டியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் அண்மைக் காலமாக அடுத்தடுத்து பெட்ரோல், டீசல் எரிவாயுவின் விலை ஏற்றம் தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கிறது.
இந்த விலை ஏற்றத்தால் மற்ற பொருட்களுடைய விலை, வாகனக் கட்டணம் உட்பட பல்வேறு நிலைகளில் இதன் பொருளாதார சிரமங்களை ஒவ்வொரு குடிமகனும் சந்திக்க நேருகிறது.
தற்போது பெட்ரோல், டீசல் விலை ஏறுவது அந்தந்த வாரத்திய செய்தியைப் போல் மாறியிருக்கிறது.
மக்களில் பெரும்பாலானோரின் வருமானம் அதிகரிக்காத நிலையில், இத்தகைய பெட்ரோல், டீசல் மூலமாக ஏறக்கூடிய விலையேற்றச் சுமையை எப்படித்தான் தாங்குவார்கள்?.