செய்தி:
கர்நாடகாவின் வாதத்தை ஏற்க காவிரி ஆணையம் மறுப்பு; தமிழகத்துக்கு 4.5 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு; எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம்!
கோவிந்த் கமெண்ட்:
காவிரி நதி நீர்ப் பங்கீட்டிற்காக தமிழகம் சட்ட ரீதியாக போராட்டத்தைத் துவங்கி பல ஆண்டுகளாகிவிட்டன.
உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி ஆணையமும் அமைக்கப்பட்டுவிட்டது. அந்த ஆணையம்தான் தற்போது தமிழகத்திற்கு நீரை திறந்துவிட வலியுறுத்தி இருக்கிறது.
ஆனால், இதற்கும் கர்நாடகாவில் வழக்கம்போல், எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்திற்கே மதிப்பளிக்கவில்லையென்றால், யாரைத்தான் தமிழக விவசாயிகள் நம்ப முடியும்?
#கர்நாடகா #தமிழகம் #காவிரிநதிநீர் #காவிரிஆணையம் #விவசாயி #காவிரி #உச்சநீதிமன்றம் #karnataka #tamilnadu #cauveryiriver #cauverywatermanagement #former #sc