செய்தி:
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள் தயாரித்து லட்சக்கணக்கில் பணம் பறித்து மாணவர்களை ஏமாற்றிய மோசடிக் கும்பல் டெல்லியில் கைது.
கோவிந்த் கமெண்ட்:
உயர்கல்விக்குச் செல்கிறவர்களை பில்டர் பண்ணுவதற்குத்தான் நீட் தேர்வே கொண்டு வரப்பட்டது. அதற்கு தகுதியைச் சரி பார்க்கிறோம் என்கிற காரணமும் சொல்லப்பட்டது.
ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்ததிலிருந்தே பல குளறுபடிகள். சிலர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பிறரை எழுத வைத்தார்கள். நீட் தேர்வு அறிவிப்பில் சில சந்தேகங்களை சிலர் எழுப்பினார்கள்.
இப்போது நீட் தேர்வையே போலியாக எழுத வைத்து, ஒரு கும்பல் மோசடி நடத்தி இருக்கிறது என்றால், நீட் தேர்வின் தகுதியை எப்படி மதிப்பிடுவது?
நீட் தேர்வு எழுதச் செல்கிறவர்களின் உடைகள், நகைகள் உள்ளிட்ட சகலவற்றையும் சோதிக்கிறவர்கள் இப்படிப்பட்ட விஷயத்தில் மட்டும் எப்படி பெரும் கோட்டை விட்டிருக்கிறார்கள்?