செய்தி:
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்!
– தென்காசி பிரச்சாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி.
கோவிந்த் கமெண்ட்:
திருப்பரங்குன்ற மலையில் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை அந்த மலையின் கீழ் வாழும் திருப்பரங்குன்றம் பிராந்திய மக்கள் கூட மறந்திருப்பார்கள்.
அவ்வளவு ஏன், அதே மலையில், அடிவாரத்தில் கருவறையில் இருக்கும் முருகன் கூட மறந்திருப்பார்.
ஆனால், டெல்லியிலிருந்து பிரச்சாரத்திற்கு வந்து பேசும் ராஜ்நாத் சிங் போன்ற மூத்த அமைச்சர்களுக்கு மட்டும் மறக்கவில்லை என்பது பிரச்சாரத்தில் தெரிகிறது.
எல்லாம் வல்ல முருகன்தான் அருள்பாளிக்க வேண்டும்.