நான் பிரிட்டிஷ் மியூசியம் சென்று அங்கு சேகரிக்கப்பட்ட இந்தியக் கலைப் பொருள்களைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அங்கு காட்சிப்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த லியனார்டோ டாவின்சியின் ‘மரியாளும் குழந்தை இயேசுவும்’ எனும் சித்திரத்தில் என் மனதைப் பறிகொடுத்தேன்.
வேளாங்கண்ணி மாதா கோயிலில் இருந்து நான் பார்த்த எல்லா மாதா கோயில்களிலும் இருக்கும் குழந்தை இயேசு இப்படி ஒரு பூனையோடு விளையாடும் விதமாக சித்தரிக்கப்பட்டது கிடையாது.
காகிதத்தில் பழுப்பு நிறக் கோடுகளால் கீறப்பட்ட இந்த ஓவியம் இன்னமும் என் கண்ணிலேயே நிற்கிறது.
– நன்றி : இந்திரன் முகநூல் பதிவு