மருது சகோதரர்கள்: பகைவனை மன்னித்த பேரருளாளர்கள்!

நூல் அறிமுகம்:

நம் செந்தமிழ் நாட்டின் விடுதலைக்கு முதல் குரல் கொடுத்தவன் வீரபாண்டிய கட்டபொம்மன். அவனைத் தொடர்ந்து ஊமைத்துரை மற்றும் மருது பாண்டியர்களான பெரிய மருது, சின்ன மருது போன்றோர் குரல் கொடுத்தனர்.

வீரமும், ஈரமும் (இரக்கம்) தெய்வ பக்தியும், நேர்மையும், மேற்கொண்ட செயலை எத்தனை இடையூறுகள் வந்தாலும் முடிக்கும் மனவலிமையும், தாய்நாட்டுப் பற்று, தாய்மொழிப்பற்று இவை இரண்டையும் தம் இரு கண்களாகக் கொண்டவர்கள்.

வாரி வழங்கும் பாரி வள்ளலுக்கு இணையானவர்கள். புலவர்களைப் போற்றிய புண்ணியவான்கள். நன்றியுணர்வு கொண்டவர்கள்.

தன்னால் பல உதவிகளைப் பெற்று, பல போர்க் கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டவன் வெல்ஷ்துரை.

ஆங்கிலேயனாக, பகைவனாக இருந்தாலும், பின்னர் அவன் தங்களைக் கொல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தாலும் கூட, அவன் தங்களின் நண்பனாகிவிட்ட படியால் அவனையும் மன்னித்த பேரருளாளர்கள் மருதுசகோதரர்கள்.

மருது சகோதரர்கள் வாழ்க்கை வரலாற்று நூலைப் படிப்பவர்கள் அவர்களைப் போன்றே நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், தெய்வ பக்தியும், ஏழை எளியோர்க்கு உதவும் உள்ளமும், மன உறுதியும் பெறுவார்கள் என்பது உறுதி.

எனவே, மருது பாண்டியர்களின் வீரம் மிகுந்த வாழ்வை ஒரு திரைப்படம் போன்று சுவையாகச் சொல்லும் இந்த நூலை அனைவரும் விரும்பி வாங்கிக் கற்று, தேசப்பற்றுடன் திகழ்வார்களாக.

******

நூல்: மருது பாண்டியர் கதை!
ஆசிரியர்: தமிழ் பிரியன்
பாரதி பதிப்பகம்
பக்கங்கள்: 128
விலை: ரூ. 67/

You might also like